A+ A-

15 ஆண்டுகள் பேக்கப் கொண்ட பேட்டரியுடன் புதிய மொபைல்!

வாடிக்கையாளர்களின் குதூகலத்தை அதிகப்படுத்த இங்கே ஓர் புதிய படைப்பு. அதிக ஆற்றல் வாய்ந்த பேட்டரியின் மூலம் அனைவரையும் மதிமயங்க செய்ய இருக்கும் புதிய ஸ்பேர் ஒன் மொபைல்போன். நிறைய மொபைல்கள் 10 நாளோ அல்லது 15 நாளோ பேட்டரி வசதியினை வழங்கும். இந்த புதிய மொபைல்போன் 15 ஆண்டுகள் வரை இந்த பேட்டரி பேக்கப் வசதியை கொடுக்கும்.

உலக அளவில் 15-ஆண்டு காலம் பேட்டரியை வழங்கும் முதல் மொபைல்போன் ஸ்பேர் ஒன் என்ற பெருமையையும் இந்த மொபைலையே சாரும். இதில் ஏஏ பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.  நீடித்து உழைக்கும் பேட்டரி வசதி கொண்ட ஸ்பேர் ஒன் மொபைல் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சூ…ப்பர் என்று அனைவரையும் சொல்ல வைக்க வரும் இந்த மொபைல் பார்க்க வெகு கியூட்டாக இருக்கும். இந்த ஸ்பேர் ஒன் மொபைல் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்டது. இதனால் இரண்டு நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் திறனையும் பெற்றுள்ளது.
இப்படி எல்லா விதத்திலும் உயர்ந்த வசதிகளை கொடுக்கும் இந்த மொபைலின் விலை அதிகம் என்று நினைக்க வேண்டாம். ஸ்பேர் ஒன் மொபைல் ரூ.2,600 ஒட்டிய விலையில் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் எளிதாக வாங்க இந்த விலை பொருத்தமானதாக இருக்கும்.