A+ A-

ரூ..5999க்கு வருகிறது புதிய டேப்லட் : ‌மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ் பல வகையான மலிவு விலை போன்களைக் களமிறக்கி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மைக்ரோமேக்ஸ் ஒரு புதிய டேப்லெட்டை இந்திய சந்தையில் களமிறக்க இருக்கிறது. பன்புக் அல்பா பி250 என்று அழைக்கப்படும் இந்த டேப்லெட் மிகத் துல்லியமான 7 இன்ச் தொடு டிஸ்ப்ளே கொண்டு வருகிறது.

அதோடு இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளம் மற்றும் 1ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் போன்றவற்றுடன் வருவதால் இது மிக விரைவாக இயங்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் இந்த டேப்லெட் 0.3எம்பி விஜிஎ முகப்பு கேமரா, 512எம்பி ரேம், 4ஜிபி மெமரி, 32ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு போன்ற வசதிகளையும் இந்த டேப்லெட்டில் காண முடியும். இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் 3ஜி, வைபை, யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்ஐ அவுட் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது. 

இந்த பேட்டரி இந்த டேப்லெட்டிற்கு நீடித்த இயங்கு நேரத்தையும் வழங்குகிறது. இந்த புதிய டேப்லெட் க்ரே நிறத்தில் வருகிறது. மேலும் இந்த டேப்லெட் மலிவான விலைக்கு விற்கப்பட இருக்கிறது. அதாவது ரூ.5,999க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த டேப்லெட்டை மிக விரைவில் இந்திய சந்தையில் பார்க்கலாம்.