A+ A-

5 மில்லியன் யூனிட்கள் விற்பனை! சாதனை பட்டியலில் ஆப்பிள்!

மின்னணு சாதன உலகில் தனி சாம்ராஜ்ஜியம் படைத்து வரும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்-5 ஸ்மார்ட்போனை வெளியிட்டு மூன்றே நாட்களில் 50 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து மீண்டும் ஓர் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.



ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆயிரமாயிரம் நிறுவனங்கள் தங்களது தலை சிறந்த படைப்புகளை வழங்கி வருகிறது. இப்படி கடுமையான போட்டிக்கு மத்தியலும் ஆப்பிள் நிறுவனம் தனக்கென்று ஒரு தனி பாதை வகுத்தி வெற்றி கொடி நாட்டி வருகிறது.
ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்று அனைவராலும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் கடந்த 21ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டு வெறும் மூன்றே தினங்களில் 50 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது. இதில் ஐஓஎஸ்-6 இயங்குதளத்தின் மூலம் நிறைய மேம்படுத்தப்பட்ட படைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன்-5 ஸ்மார்ட்போனை வாங்க காத்திருக்கும் அத்தனை வாடிக்கையாளர்களுக்கும் தாமதமாகாமல், இந்த ஸ்மார்ட்போன் வெகு சீக்கிரத்தில் சென்றடைய, பல முயற்சிகள் செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்திருக்கிறார்.
இதனால் ரீட்டெயில் ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் வலைத்தளங்களின் மூலம் ஐபோன்-5 ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய பல ஏற்பாடுகளும் வெகு துரிதமாக நடந்து
வருகிறது.
இன்னும் பல நாடுகளில் இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகவில்லை. மற்ற நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது என்றால், ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இன்னும் அதிக விற்பனையை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆயிரமாயிரம் நிறுவனங்கள் தங்களது தலை சிறந்த படைப்புகளை வழங்கி வருகிறது. இப்படி கடுமையான போட்டிக்கு மத்தியலும் ஆப்பிள் நிறுவனம் தனக்கென்று ஒரு தனி பாதை வகுத்தி வெற்றி கொடி நாட்டி வருகிறது.