கடந்த ஆகஸ்ட் 29 நடந்த ஐஎப்எ விழாவில் சாம்சங் தனது உலகின் முதல் விண்டோஸ் 8 போனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கும் எடிஐவி எஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த புதிய போனைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த புதிய சாம்சங் போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 4.8 இன்ச் அளவில் கொரில்லா கண்ணாடியுடன் வரும் சூப்பர் அமோலெட் எச்டி டிஸ்ப்ளே மிகவும் சூப்பராக இருக்கும். அதோடு மிகவும் துல்லியமாக இருக்கும்.
அடுத்ததாக இந்த போன் 1.5 ஜிஹெர்ட்ஸ் டூவர் கோர் க்வல்காம் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும் என்பது நிச்சயம். மேலும் இதன் 8எம்பி பின்பக்க கேமரா மற்றும் 1.9எம்பி முகப்பு கேமரா சூப்பரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்கும் மற்றும் வீடியோ உரையாடல் நடத்துவதற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
1ஜிபி ரேம் மற்றும் 16 அல்லது 32ஜிபி சேமிப்புடன் வரும் இந்த போனில் பல செயல்களை ஒரே நேரத்தில் செய்வதற்கும் மிகவும் வசதியாக இருக்கும். ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் சாம்சங் சாதனங்கள் உலகையே ஒரு கலக்கு கலக்கின. அதனைத் தொடர்ந்து தற்போது சாம்சங் விண்டோஸ் இயங்கு தளத்திற்குள் புகுந்திருக்கிறது.
விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கும் இந்த புதிய சாம்சங் போன் உண்மையாகவே பொழுதுபோக்கு அம்சத்திற்கும் அதில் வேலை செய்வதற்கும் அருமையாக இருக்கும் என்று சாம்சங் தெரிவித்திருக்கிறது.
கருத்துரையிடுக