A+ A-

கூகுளில் கேரளாவுக்கு இரண்டாவது இடம்


சூப்பரான இயற்கை வளங்களுக்கும் படிப்புக்கும் பெயர் பெற்ற மாநிலம் கேரளா என்பது உலகம் அறிந்த உண்மை. மேலும் தற்போது இந்தியாவில் அந்த மாநிலம் வெகு வேகமாக முன்னேறி வருகிறது.
தற்போது அந்த மாநிலத்திற்கு கிடைத்திருக்கும் இன்னொரு புதிய பெருமை என்றால் கூகுள் மேப்பில் அதிகம் தேடப்பட்ட இந்திய பகுதிகளில் கேரளா இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்த தகவலை கூகுள் மேப் அறிவித்திருக்கிறது.
இதற்கான ஆய்வை கடந்த மே மாதம் முதல் இந்த செப்டம்பர் முதல் வாரம் வரை கூகுள் மேப் நடத்தியது. இந்த ஆய்வில் கூகுளின் மேப்பில் அதிகமாக தேடப்பட்ட பகுதிகளில் கேரளா 2வது இடத்தில் இருக்கிறது.
முதல் இடத்தில் யமுனா எக்ஸ்ப்ரஸ் சாலை இருக்கிறது. 165 கிமீ நீளமுள்ள இந்த சாலை சமீபத்தில்தான் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டது. இந்த சாலை கிரேட்டர் நோய்டாவையும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ராவையும் இணைக்கிறது.
நம் தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் 3வது இடத்திலும் தாஜ்மகால் 4வது இடத்திலும் இருக்கிறது.


சூப்பரான இயற்கை வளங்களுக்கும் படிப்புக்கும் பெயர் பெற்ற மாநிலம் கேரளா என்பது உலகம் அறிந்த உண்மை. மேலும் தற்போது இந்தியாவில் அந்த மாநிலம் வெகு வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது அந்த மாநிலத்திற்கு கிடைத்திருக்கும் இன்னொரு புதிய பெருமை என்றால் கூகுள் மேப்பில் அதிகம் தேடப்பட்ட இந்திய பகுதிகளில் கேரளா இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்த தகவலை கூகுள் மேப் அறிவித்திருக்கிறது.