ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும், உலகின் சரித்திர நாயகர்களின் பிறந்த நாளையும், தனது கூகுள் டூடில் பக்கத்தின் மூலம் கொண்டாடி வருகிறது கூகுள் நிறுவனம். இப்படி டூடில் பக்கத்தின் மூலம் மக்களுக்கு சில தகவல்களையும் வழங்கி வரும் கூகுள், தனது பிறந்த நாளையும் இதில் தெரிவித்து இருக்கிறது.
அனிமேஷன் மூலம் ஒவ்வொரு டூடில் பக்கத்தின் வடிவமைப்பையும் உருவாக்கி வரும் கூகுள், தனது பிறந்த நாளிற்கும் ஒரு அனிமேஷனை செய்துள்ளது. இந்த டூடிலின் வழியாக, சாக்லெட் கேக் வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியாக அனைவருக்கும் தெரிவிக்கிறது கூகுள்.
எந்த ஒரு தகவலை தேடுவதாக இருப்பினும், அதற்கு சிறந்த பாலமாக இருக்கும் கூகுளின் இந்த பிறந்த நாள் அனைவரையும் மகிழ்விப்பதாகவே இருக்கிறது. இத்தனை ஆண்டு காலமாக தனது சேவையினை வழங்கி வரும் கூகுளுக்கு நாமும் சொல்லலாம் பிறந்த நாள் வாழ்த்து.
கருத்துரையிடுக