சோனி நிறுவனத்தின் விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த சோனி கம்யூட்டர் என்டர்டைன்மென்ட்(எஸ்சிஇ) அமெரிக்காவில் உள்ள கலிபோரினியாவைச் சேர்ந்த க்ளவுடு வீடியோ விளையாட்டுகளைத் தயாரிக்கும் கெய்கை என்ற நிறுவனத்தை வாங்க இருக்கிறது. இந்த நிறுவனத்தை சோனி 380 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்க இருக்கிறது.
எஸ்சிஇயின் தலைமை இயக்குனர் ஆன்ட்ரூ ஹவுஸ் கூறும் போது, இந்த கெய்கை நிறுவனத்தை வாங்குவதன் மூலம் சோனி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய புதிய க்ளவுடு வீடியோ விளையாட்டுகளை வழங்க முடியும் என்று கூறுகிறார்.
2008ல் தொடங்கப்பட்ட இந்த கைகை நிறுவனம் மொபைல், டேப்லெட் மற்றும் டிவிக்களுக்கான ஏராளமான வீடியோ விளையாட்டுகளைத் தயாரித்து வழங்கியது. அதோடு சோனி, எல்ஜி மற்றும் சாசங் போன்ற நிறுவனங்களோடு இணைந்து விளையாட்டுகளை தயார் செய்து அவர்களில் ஸ்மார்ட் டிவிகளில் விளையாடும் வகையில் அமைத்தது.
இப்போது சோனி இந்த கைகையை வாங்குவதால் சோனியின் ப்ளேஸ்டேசனும் இந்த சோனி கைகையோடு இணைந்துவிடும். அதன் மூலம் சோனி இன்னும் பல புதிய ஏராளமான வீடியோ விளையாட்டுகளைக் களமிறக்கும் என நம்பலாம்.
கருத்துரையிடுக