A+ A-

ஆங்கிரி பேர்ட்ஸ் என்ற புதிய வீடியோ கேமினை உருவாக்கிய ரோவியோ நிறுவனம் புதிதாக ‘பேடு பிக்கீஸ்’ என்ற அடுத்த கட்ட வீடியோ கேமினை அறிமுகம் செய்கிறது.





பன்றிகளிடம் இருந்து தனது முட்டைகளை காப்பாற்றும் பறவைகள் என்பது மாறி, இப்போது பறவைகளை பழி வாங்க துடிக்கும் பன்றி குட்டிகளாக உருவெடுத்திருக்கிறது இந்த ‘பேடு பிக்கீஸ்’.
பன்றி குட்டிகள் நடப்பதையும், ஓடுவதையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் பறப்பதை பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த பேடு பிக்கீஸ் பறக்க தயாராக இருக்கிறது. இப்படி பறந்து பழி வாங்க துடிக்கும் இந்த பன்றி குட்டிகள் அதற்கு தேவையான அனைத்து சாதனங்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது. ஆனால் இதை ஓட்டுவதற்கு உங்களின் உதவி
தேவை என்று காத்திருக்கிறது ரோவியோ நிறுவனத்தின் பேடு பிக்கீஸ். விளையாடுபவர்கள் திசை காட்டிய பக்கம் ஓட இந்த பன்றிகுட்டிகள் தயராக இருக்கிறது. தய்வானின் தலைநகரான தய்பேவில் இந்த புதிய பேடு பிக்கீஸ் விளையாட்டிற்கு, ரோவியோ ஆசியாவின் துணை தலைவர் தொடக்க விழாவினை துவங்கிவைத்தார்.இந்த விளையாட்டினை ஆன்ட்ராய்டு ஸ்போரில் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.