கவாஸாகி-பஜாஜ் கூட்டணியில் இந்தியாவில் நிஞ்சா 300ஆர் பைக்கை அறிமுகம் படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு நிஞ்சா வரிசையில் 300ஆர் மற்றும் 400 ஆர் என்ற இரு புதிய மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்கிறது. இதில் 299சிசி எஞ்சின் கொண்ட 300ஆர் பைக் 39 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்தநிலையில், இந்தியாவில் 300ஆர் நிஞ்சா ஸ்போர்ட்ஸ் பைக்கை கவாஸாகி-பஜாஜ் கூட்டணி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுதவிர, விரைவில் சாலை சோதனை ஓட்டங்களையும் துவங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய பைக் இந்திய சாலைகளில் தடம் பதித்துவிடும் என்று நம்பப்படுகிறது. இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்பட்டால் 250சிசி நிஞ்சா மற்றும் 650சிசி நிஞ்சா பைக்குகளுக்கு இடையிலான இடைவெளி சற்று குறையும்.
கருத்துரையிடுக