A+ A-

சோலார் கீபோர்டுகளை களமிறக்கும் லாஜிடெக்

கணினிகளுக்கான உதிரிப் பாகங்களை தயாரித்து வரும் லாஜிடெக் நிறுவனம் சமீபத்தில் 3 புதிய ப்ளூடூத் கீபோர்டுகளைக் களமிறக்கியிருக்கிறது. இந்த கீபோர்டுகளுக்கு அல்ட்ராதின் கீபோர்ட் கவர், சோலார் கீபோர்ட் போலியோ மற்றும் வயர்லஸ் சோலார் கீபோர்ட் கே760 ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.





சோலார் கீபோர்ட் போலியோ மற்றும் அல்ட்ராதின் கீபோர்ட் ஆகியவற்றை ஐபேடில் இணைத்துக் கொண்டு வேலை செய்ய முடியும். அதே நேரத்தில் வயர்லஸ் சோலார் கீபோர்ட் கே760ஐ ஐபோன், ஐபேட் மற்றும் மேக் போன்ற சாதனங்களில் இணைத்து வேலை செய்ய முடியும்.

இந்த அல்ட்ராதின் கீபோர்ட் கவர் ப்ளூடூத் மூலம் இயங்குகிறது. இந்த சாதனம் ஐபேடின் திரைக்கு பாதுகாப்பு வழங்குகிறது. இதில் உள்ள மேக்னடிக் க்ளிப் மூலம் ஐபேடில் பொருத்திக் கொள்ளலாம். மேலும் இந்த கீபோர்ட் ஐபேட்2 மற்றும் ஐபேட் ஆகிய சாதனங்களோடு மிக எளிதாக வேலை செய்யும்.

லாஜிடெக் சோலார் கீபோர்ட் போலியோவில் சோலார் செல்கள் உள்ளதால் எந்த தட்ப வெப்ப நிலையிலும் இது கீபோர்டுக்கு சார்ஜ் கொடுக்கும். இந்த கீபோர்ட் ப்ளூடூத் மூலம் இயங்குகிறது. இந்த கீபோர்ட் மல்டி வியூவ் ஸ்டேன்டை வழங்குகிறது. இதன் ஒன்றில் டைப் அடிக்க முடியும், மற்றொன்றில் வீடியோ பார்க்க முடியும்.

அடுத்ததாக லாஜிடெக் வயர்லஸ் சோலார் கீபோர்ட் கே760 கீபோர்ட் மேக் கீகளைக் கொண்டுள்ளது. இருட்டில் கூட இதில் இருக்கும் சோலார் செல்கள் இந்த கீபோர்டுக்கு சார்ஜ் வழங்கும்.

விலையைப் பொருத்தமட்டில் அல்ட்ராதின் கீபோர்ட் கவர் மற்றும் வயர்லஸ் சோலார் கீபோர்ட் கே760 ஆகியவை ரூ.6,599க்கும், லாஜிடெக் சோலார் கீபோர்ட் போலியோ ரூ.8,999க்கும் விற்கப்படுகின்றன.

சோலார் கீபோர்ட் போலியோ மற்றும் அல்ட்ராதின் கீபோர்ட் ஆகியவற்றை ஐபேடில் இணைத்துக் கொண்டு வேலை செய்ய முடியும். அதே நேரத்தில் வயர்லஸ் சோலார் கீபோர்ட் கே760ஐ ஐபோன், ஐபேட் மற்றும் மேக் போன்ற சாதனங்களில் இணைத்து வேலை செய்ய முடியும்.