A+ A-

கல்விக்கென்றே பிரத்தியேகமாக டெட்-எட் வீடியோ சேனல்!

கல்விக்கென்றே பிரத்தியேகமான டெட்-எட் என்ற வீடியோ சேனலை யூடியூபில் அறிமுகம் செய்து இருக்கிறது டெட் நிறுவனம். இந்த சேனலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன், டேப்லட்களிலும் பார்க்க புதிய அப்ளிக்கேஷனையும் உருவாக்கி உள்ளது டெட் நிறுவனம். இதனால் கல்வியை பற்றி பயனுள்ள சில தகவல்களை இந்த வீடியோ சேனலில் பெற முடியும்.

இப்படி கல்வியை மையப்படுத்தி பல நிறுவனங்கள் புதிய புதிய தொழில் நுட்ப வசதிகளை கொடுத்து கொண்டு இருக்கிறது. புதிய வழி முறைகளை ஏற்படுத்த சிறந்த யுக்திகளை கையாண்டு வருவதாகவும், இது போன்ற வித்தியாசமான தொழில் நுட்ப முன்னேற்றங்களினால் மக்களுக்கு சில முக்கிய பயன்பாடுகளை கொடுக்க முடியும் என்றும் டெட் நிறுவனத்தின் எக்ஸிக்கியூட்டிவ் புரொடியூஸரான ஜுன் கொஹென் தெரிவித்துள்ளார்.
டெட் நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்த அப்ளிக்கேஷனில் ஆஃப்லைன் பிரவுசிங், வியூவிங் போன்ற சவுகரியங்களையும் பெற முடியும். வாக்கிங், ஜாகிங் என்று வெளியில் செல்லும் போது டெட் வீடியோவினை பார்க்க முடியாது. இந்த குறையை தீர்க்க ஆடியோ ஸ்ட்ரீமிங் சவுகரியமும் கொடுக்கப்பட்டுள்ளது. வெளியில் சென்று கொண்டு இருக்கும் போதும் இதன் ஆடியோ ஸ்ட்ரீமிங் வசதியின் மூலம் இதன் பயனுள்ள தகவல்களை கேட்டு மிகிழலாம்.