A+ A-

எங்கிருந்தாலும் வீட்டிற்கு செல்ல சரியான வழிகாட்டும் புதிய காலணி

இங்கிலாந்தைச் சேரந்த டோமினிக் வில்கோக்ஸ் என்ற ஒரு காலணி வடிவமைப்பாளர் ஒரு புதிய கணினி தொழில் நுட்பம் கொண்ட புதிய காலணியை வடிவமைத்திருக்கிறது. அதாவது ஜிபிஎஸ் வசதி கொண்ட ஒரு காலணியை வடிவமைத்திருக்கிறார்.



இந்த புதிய காலணி ஜிபிஎஸ் வசதியைக் கொண்டிருப்பதால் ஒருவர் போக வேண்டிய இடத்திற்கு மிக பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். அவர் வழி தெரியாமல் விழி பிதுங்க வேண்டியதில்லை. இந்த காலணியே சரியான வழியைக் காட்டிவிடும் என்று அவர் கூறுகிறார்.
இந்த புதிய காலணியை வடிவமைக்க 1939ல் வந்த விசர்ட் ஆப் ஒஸட் என்ற திரைப்படம் தனக்கு உந்துதலாக இருந்தாக அவர் கூறுகிறார். அந்த படத்தில் நடித்திருக்கும் டோரத்தி என்பவர் தனது வீட்டிற்கு சரியான வழியில் சென்று சேர்வதற்காக தனது காலணியில் செட் செய்வார். அந்த காலணியும் அவரை சரியான பாதையில் அழைத்துச் சென்று அவரை வீட்டில் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்க்கும்.
இந்த திரைப்படத்தைப் பார்த்த அவர் எதார்த்த வாழ்விலும் இது சாத்தியமா என்று யோசித்து இந்த காலணியை உருவாக்கி இருக்கிறது. எனவே ஒருவர் எங்கிருந்தாலும் இந்த காலணியின் வழிகாட்டுதலில் பத்திரமாக தனது வீடு சேர முடியும் என்று டோமினிக் கூறுகிறார்.
மேலும் இந்த காலணியில் கணினி சாப்ட்வேர், யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ் ஆண்டனா மற்றும் வயர்லஸ் வசதி போன்ற தொழில் நுட்பங்கள் உள்ளன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு இந்த காலணி மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்பலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...

இங்கிலாந்தைச் சேரந்த டோமினிக் வில்கோக்ஸ் என்ற ஒரு காலணி வடிவமைப்பாளர் ஒரு புதிய கணினி தொழில் நுட்பம் கொண்ட புதிய காலணியை வடிவமைத்திருக்கிறது. அதாவது ஜிபிஎஸ் வசதி கொண்ட ஒரு காலணியை வடிவமைத்திருக்கிறார்.