சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கிடைய நடக்கும் போர் இப்போதைக்கு முடியாது என்று தெரிகிறது. சமீபத்தில்தான் சாம்சங்கை கோர்ட்டுக்கு இழுத்து ஒரு பெரிய தொகையை இழப்பீடாகப் பெற்றது ஆப்பிள்.
அதற்கு பழிவாங்கும் வகையில் தற்போது ஆப்பிளின் புதிய ஐபோன் 5வை வைத்து ஆப்பிளை வம்புக்கிழுக்க தொடங்கி இருக்கிறது சாம்சங். ஏற்கனவே கடந்த 19 அன்று அமெரிக்க நீதிமன்றத்தில் ஆப்பிள் ஐபோன் 5வுக்கு எதிராக ஒரு வழக்கைத் தொடர்ந்திருக்கிறது சாம்சங். அதாவது சாம்சங் போன்களில் இருக்கும் 8 முக்கிய தொழில் நுட்ப வசதிகளை ஆப்பிள் காப்பி அடித்து அவற்றை தனது ஐபோன் 5வில் வைத்திருக்கிறது என்று சாம்சங் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.
ஆனால் அதற்கு ஆப்பிள் மறுப்பு தெரிவித்திருக்கிறது. வரும் 26 அன்று கோர்ட்டில் அடுத்த கட்ட விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த வழக்கு முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது.
தற்போது விற்பனையில் சாதித்துக் கொண்டிருக்கும் ஐபோன் 5 இந்த நீதிமன்ற வழக்கினால் அதன் விற்பனை பாதிக்கப்படாது என்றுதான் தெரிகிறது.
கருத்துரையிடுக