சீர்காழி: தேர்வுக்கு படிக்கச் சொல்லி கண்டித்த தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பிளஸ் டூ மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் சீர்காழியைச் சேர்ந்த ஆடியபாதம். அவரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி உள்ளது. நாகை நரிமணத்தில் உள்ள பெட்ரோலியம் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றினார். அவரது மகன் கவுதம் பிளஸ் டூ படித்து வந்தான்.

கவுதம் ஒழுங்காக படிக்காமல் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்திருக்கிறான். இதை ஆடியபாதம் மிகக் கடுமையாக கண்டித்திருக்கிறார். இதனால் கோபத்தில் இருந்த கவுதம், நேற்று பிற்பகல் தாயுடன் பேச்சிக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் தந்தையை சுட்டிருக்கிறான். இதில் ஆடியபாதம் சுருண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆடியபாதத்தின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயின் கண் எதிரேயே தந்தையை சுட்டுக் கொன்ற கவுதமை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:oneindia
நன்றி:oneindia
கருத்துரையிடுக