A+ A-

சோனி வழங்கும் புதிய ஹேண்டிகேம்

சோனி இந்தியா நிறுவனம் ஒரு புதிய கை கேமராவைக் களமிறக்கி இருக்கிறது. இந்த ஹேன்டிகாம் டிசிஆர்-பிஜே6இ என்று அழைக்கப்படுகிறது. இந்த சாதனம் இந்தியாவில் ரூ.19,990க்கு விற்கப்படுகிறது. இந்த ஹேண்டிகாம் ப்ரொஜெக்டரால் ஆனது.

சோனி வழங்கும் புதிய ஹேண்டிகேம்


அதனால் இது எடுக்கு போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இதில் உள்ள ப்ரொஜெக்டர் மூலம் உடனே பெரிய திரையில் பார்க்க முடியும். மேலும் இந்த வீடியோக்கள் பெரிதாக விரிவடைந்தாலும் மிகத் துல்லியமாக இருக்கும்.
இந்த கேமரா பல நவீன தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக இது 1/800கே பிக்சல் சிசிடி கேமராவைக் கொண்டுல்ளது. அதோடு இந்த சாதனத்தில் நவீன ஹோல் அக்குமலேசன் டையாட் இமேஜிங் டெக்னாலஜியும் உள்ளது. அதனால் எப்படிப்பட்ட சூழலில் வீடியோ எடுத்தாலும் இதில் டிஜிட்டல் இரைச்சல் இருக்காது.
மேலும் இருட்டிலும் மிக அழகாக படம் பிடிக்கும். இந்த சாதனம் ப்ரொஜெக்டர் வசதியுடன் வந்தாலும் இதன் விலை குறைவாக இருப்பதால் கண்டிப்பாக இந்த சாதனம் விற்பனையில் சாதனை படைக்கும் என்று நம்பலாம்.

சோனி இந்தியா நிறுவனம் ஒரு புதிய கை கேமராவைக் களமிறக்கி இருக்கிறது. இந்த ஹேன்டிகாம் டிசிஆர்-பிஜே6இ என்று அழைக்கப்படுகிறது. இந்த சாதனம் இந்தியாவில் ரூ.19,990க்கு விற்கப்படுகிறது. இந்த ஹேண்டிகாம் ப்ரொஜெக்டரால் ஆனது