A+ A-

பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் உயர்வு




சென்னை: புதிய பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பக் கட்டணம் உயர்த்தப்பட்டு, வரும், 1ம் தேதி முதல், அமலுக்கு வருகிறது. தற்போது, சாதாரண முறை பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், 1,000 ரூபாயும், தத்கால் முறை விண்ணப்பதாரர்கள், 2,500 ரூபாயும், விண்ணப்பக் கட்டணமாக செலுத்துகின்றனர். 2002 முதல், அமலில் உள்ள இக்கட்டணங்கள் முறையே, 500, 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, வரும் அக்., 1ம் தேதி முதல், சாதாரண முறை பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், 1,500 ரூபாய்; தத்கால் முறை விண்ணப்பதாரர்கள், 3,500 ரூபாய், விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம், பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி, தனியாரிடம் தரப்பட்டு, ஓராண்டு முடிந்துள்ள நிலையில் உயர்த்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.