இந்தியாவில் உள்ள தனது லேன்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு அருமையான திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த திட்டத்திற்கு அன்லிமிட்டட் ஆன் நெட் காலிங் டியூரிங் நைட் ஹவர்ஸ் ப்ளான் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள லேன்ட்லைன் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை வாங்க விரும்பினால் தாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் மாத வாடகைக் கட்டண திட்டத்தோடு இந்த புதிய திட்டத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தைப் பெறுவதன் மூலம் பிஎஸ்என்எல்லின் லேன்ட்லைன் வாடிக்கையாளர்கள் இரவு முழுவதும் இலவசமாக தங்கள் லேன்ட்லைன் போனில் பேச முடியும். இந்த புதிய திட்டத்தைப் பெற அவர்கள் மாதம் எக்ஸ்ட்ராவாக ரூ.59 மட்டும் செலுத்தினால் போதும்.
மேலும் இந்த திட்டம் இரவும் 10 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே பொருந்தும். மேலும் இந்த திட்டம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரவிருக்கிறது.
கருத்துரையிடுக