A+ A-

இலங்கையைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வழியாகவும் இந்தியாவை வளைக்கும் சீனா!



காபூல்: இலங்கையை தனது கைக்குள் போட்டுக் கொண்டு விட்ட சீனா அடுத்து ஆப்கானிஸ்தானையும் தன் பக்கம் திரு்பபும் முயற்சிகளில் இறங்கியுள்ளதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான்தான் நமது பரம்பரை எதிரி, பாகிஸ்தானால்தான் நமக்கு ஆபத்து என்று நாம் பாரம்பரியாக கத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான ஆபத்து சீனாதான் என்பதை நாம் ஏனோ வசதியாக மறந்து கொண்டிருக்கிறோம். பாகிஸ்தானில் யாராவது தும்மி அந்த சத்தம் இந்தியாவுக்குள் கேட்டு விட்டாலே டென்ஷனாகி விடும் நாம், சீனாக்காரர்கள் இந்திய எல்லைப் பகுதியில் அருணாச்சல் பிரதேசத்தில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை ஸ்வாகா செய்தாலும் கூட கண்டு கொள்ளாமலேயே இருக்கிறோம்.
இலங்கையைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வழியாகவும் இந்தியாவை வளைக்கும் சீனா!
தற்போது இந்தியாவை எப்படியெல்லாம் சுற்றுச் சூழ்ந்து செக் வைக்கலாம் என்ற முனைப்புடன் திரிந்து கொண்டிருக்கும் சீனா ஏற்கனவே நேபாளத்தை தன் பக்கம் திருப்பி நமக்கு கடுப்படித்து வந்தது. பிறகு வங்கதேசத்திலும் தனது கடற்படைப் பிரிவை நிறுத்தி வைத்தது. லேட்டஸ்டாக இலங்கையை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து விட்டது.
ஈழத்தில் போர் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே இலங்கை தனது புத்தியைக் காட்டி விட்டது. அதுவரை இந்தியாவையே நம்பியிருந்த இலங்கை, விடுதலைப் புலிகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து இப்போது சீனா பக்கம் திரும்பி உட்கார்ந்து விட்டது.
இந்தியாவை எப்படியெல்லாம் கடுப்படிக்க முடியுமோ அதையெல்லாம் தவறாமல் செய்து வருகிறது. சமீபத்தில் கூட இலங்கைக்கு வந்த சீன பாதுகாப்பு அமைச்சரும், 2ம் நிலை கம்யூனிஸ்ட் தலைவரும் இலங்கையுடன் 16க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டனர். இதன் மூலம் இலங்கை நமக்கு பகிரங்கமாகவே சவால் விட்டதாக கருதப்பட்டது.
ஆனாலும் நமது முகத்தில் கரி பூசப்பட்டதைக் கண்டு கொள்ளாமல், அதை துணியை எடுத்துத் துடைத்துக் கொண்டு, இந்தியாவுக்கு வந்த ராஜபக்சேவுக்கு ராஜ உபச்சாரம் கொடுத்தது இந்திய அரசு. மேலும் அவருக்கு சாப்பாடு போட்டு கவனித்தும் அனுப்பி வைத்தார் பிரதமர்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு இன்னும் ஒரு பாதுகாப்புக் கவலையை சீனா ஏற்படுத்தியுள்ளது, ஆப்கானிஸ்தான் மூலமாக.
ஆப்கானிஸ்தானின் புனரமைப்புத் திட்டங்களை இந்தியாதான் பெருமளவில் செய்து வருகிறது. இதற்காக பாகிஸ்தானின் பகையைக் கூட ஆப்கானிஸ்தான் சந்திக்க நேரிட்டது. இருப்பினும் அமெரிக்காவின் உதவியுடன், இந்தியாவின் உதவிகளைப் பெற்று வருகிறது ஆப்கானிஸ்தான்.
இந்த நிலையில்தான் தற்போது சீனாவும், ஆப்கானிஸ்தானுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.

தங்களது ராணுவம், போலீஸ் துறைக்கு நிதி பெறும் முயற்சியில் ஆப்கானிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சீனாவின் உள்நாட்டு பாதுகாப்பு உயர் அதிகாரியும், கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினருமான ஹோவ் யாங்காங் திடீரென்று ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு காபூல் நகரில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயை சந்தித்துப் பேசினார்.

கிட்டத்தட்ட 50ஆண்டுகளாக சீனாவைச் சேர்ந்த எந்த உயர் அதிகாரியும் ஆப்கானிஸ்தானுக்கு வந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக ஒருவர் வந்துள்ளார். இந்த வருகைக்குக் காரணமே ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் கை ஓங்கி வருவதே என்று கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது சீனா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு, பொருளாதாரம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனால் என்ன ஒப்பந்தங்கள் என்பது குறித்துத் தகவல் இல்லை.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 1 லட்சம் போலீசாருக்கு தற்போது நேட்டோ படையினர் பயிற்சி கொடுத்து வருகிறார்கள். ஒரு வேளை நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானை காலி செய்து விட்டு போன பின்னர் சீனப் படைளை அங்கு கொண்டு வந்து குவிக்க சீனத் தரப்பு குயுக்தியாக திட்டமிட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை அப்படி நேர்ந்தால் இந்தியாவால் அங்கு எதுவும் செய்ய முடியாமல் போகும். வெளியேற நேரிடும். அப்படி நேர்ந்தால், ஆப்கானிஸ்தானும், சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட தோதுவாகி விடும்.
அப்படி நேர்ந்தால் அது தலிபான் தீவிரவாதிகளுக்குத்தான் சாதகமாக அமையும். அதாவது சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தான் மூலம் தீவிரவாதிகள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குள் தலை தூக்க வாய்ப்பு ஏற்படலாம். அப்படி நேர்ந்து விட்டால் இந்தியாவுக்கு இரட்டைத் தலைவலி போய் மூன்று தலைவலி சேர்ந்து வந்தது போலாகி விடும் என்பதால் சீனாவின் ஆப்கானிஸ்தான் வருகை, எப்படியோசித்துப் பார்த்தாலும் இந்தியாவுக்கு சாதகமானது இல்லை என்றே தெரிகிறது. நன்றி:oneindia

காபூல்: இலங்கையை தனது கைக்குள் போட்டுக் கொண்டு விட்ட சீனா அடுத்து ஆப்கானிஸ்தானையும் தன் பக்கம் திரு்பபும் முயற்சிகளில் இறங்கியுள்ளதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான்தான் நமது பரம்பரை எதிரி, பாகிஸ்தானால்தான் நமக்கு ஆபத்து என்று நாம் பாரம்பரியாக கத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான ஆபத்து சீனாதான் என்பதை நாம் ஏனோ வசதியாக மறந்து கொண்டிருக்கிறோம். பாகிஸ்தானில் யாராவது தும்மி அந்த சத்தம் இந்தியாவுக்குள் கேட்டு விட்டாலே டென்ஷனாகி விடும் நாம், சீனாக்காரர்கள் இந்திய எல்லைப் பகுதியில் அருணாச்சல் பிரதேசத்தில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை ஸ்வாகா செய்தாலும் கூட கண்டு கொள்ளாமலேயே இருக்கிறோம்.