செப்ரோனிக்ஸ் என்று பெயரில் செயல்பட்டு வரும் டாப் நோட்ச் இன்போட்ரோனிக்ஸ் நிறுவனம் ஒரு புதிய பினோம் மல்டி மீடியா ஹெட்போனை களமிறக்க இருக்கிறது. இந்த ஹெட்போனின் முக்கிய விசேஷம் என்னவென்றால் இந்த ஹெட்போனோடு சேர்த்து ஒரு டிஜிட்டல் வால்யூம் கண்ட்ரோலும் வழங்கப்படுகிறது.
இந்த மல்டி மீடியா ஹெட்போன் வீடியோ கேம் விளையாட்டுப் பிரியர்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போன் சூப்பாரன ஒலியை வழங்கும். இதன் இயர் கப்பில் பஞ்சு உள்ளதால் காதில் இதை அணிவதற்கு சுகமாக இருக்கும்.
இந்த ஹெட்போன் 1.8 மீட்டர் நீளமான கேபுளுடன் வருகிறது. அதோடு இந்த ஹெட்போனை ரிமோட் மூலம் இயக்க முடியும். மேலும் இதன் மைக்கையும் மிக எளிதாகப் பயன்படுத்த முடியும். வீடியோ கேம் விளையாடும் போது இந்த ஹெட்போனை அணிந்து கொண்டால் விளையாட்டுக் கேற்ப அதிரடியான இசையை வழங்கும்.
அனைத்து தரப்பினரையும் இந்த போன் கவரக்கூடிய வகையில் உள்ளது. இந்த போன் ரூ.749க்கு விற்கப்படுகிறது.
கருத்துரையிடுக