இந்த நீட்சி மூலம் ஜிமெயிலில் அனுப்பப்படும் ஈமெயில்களை Track செய்யலாம். நீங்கள் அனுப்பிய ஈமெயிலை மற்றொருவர் ஓபன் செய்த உடன் அதற்கான அறிவிப்பு உங்கள் ஈமெயிலுக்கு வந்து விடும். இனி " மச்சி நான் உன் மெயிலை பார்க்கவே இல்லடா" யாரும் உங்க கிட்ட சொல்ல முடியாது. நீங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.
உபயோகப்படுத்துவது எப்படி?
- இதனை உபயோகிப்பது மிகவும் சுலபம். முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை டவுன்லோட் செய்து இந்த நீட்சியை உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். (ஏற்க்கனவே இன்ஸ்டால் செய்து இருந்தால் மறுபடியும் இணைக்க தேவையில்லை.)
- இந்த நீட்சி தற்பொழுது குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளுக்கு மட்டுமே கிடைக்கும். மற்ற உலவியை உபயோகித்தால் இந்த வசதியை பெற முடியாது.
- இந்த நீட்சியை இன்ஸ்டால் செய்த உடன் ஜிமெயிலை ஓபன் செய்து Compose பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
- அங்கு Send Later என்ற பட்டனுடன் Track என்ற ஒரு புதிய பட்டனும் வந்திருக்கும்.
- ஈமெயில் அனுப்புவதற்கு முன் அந்த Track பட்டனை டிக் செய்து அனுப்பி விட்டால் அந்த ஈமெயிலை ஓபன் செய்தவுடன் அந்த விவரங்கள் உங்கள் மெயிலுக்கு வந்து விடும்.
மேலும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
கருத்துரையிடுக