A+ A-

16 லட்சத்தில் சோனியின் காஸ்ட்லி டிவி!


தொழில் நுட்ப உலகில் புதுமைகளை புகுத்தி வரும் சோனி நிறுவனம் 4கே டெக்னாலஜி கொண்ட டிவியை அறிமுகம் செய்கிறது.
இந்த டிவி 84 இஞ்ச் திரையுடன் பார்ப்பவர்களை ஸ்தம்பித்து நிற்க செய்யும். நிறைய டிவியில் உயர்ந்த துல்லியத்தினை பெற முடியும். ஆனால் சோனி நிறுவனம் வழங்கும் இந்த புதிய தொலைக்காட்சியில் 4 மடங்கு அதிகமாக (3840X2160) சிறப்பான துல்லியத்தினை பெறலாம். இதை தான் 4கே டெக்னாலஜியில் அளிக்கிறது சோனி.

மேலும் 84 இஞ்ச் திரை கொண்ட இந்த டிவியை வருகிற 20ம் தேதி ப்ரீ-ஆர்டரில் முன்பதிவு செய்யலாம். இந்த டிவி 16 லட்சத்தி 99 ஆயிரத்தி தொள்ளாயிரத்து 90 விலை கொண்டதாக இருக்கும். இதன் விலையே அனைவரையும் பெரு மூச்சுவிட வைக்கும் என்றாலும், அந்த அளவு இது புதிய தொழில் நுட்ப வசதியினையும் கொடுக்கும் என்பதையும்
யோசிக்க வைக்கிறது.
இது மட்டும் அல்லாமல் பல புதிய எலக்ட்ரானிக் சாதனங்களையும் அறிமுகம் செய்கிறது சோனி நிறுவனம். புதிதாக 3டி வியூவர் எச்எம்இசட்-டி2 எலக்ட்ரானிக் சாதனத்தையும் வழங்குகிறது சோனி நிறுவனம். இந்த 3டி வியூவரில் 5.1 துல்லியத்தில் ஒலியினை பெறலாம், இரைச்சல் ஏதும் இல்லாமல். அதோடு ட்ரூபேக் டிஸ்ப்ளே, ஓலெட் திரை தொழில் நுட்பத்தினை இந்த 3டி வியூவரில் பெறலாம்.
மேலும் சோனியின் இந்த 3டி எலக்ட்ரானிக் சாதனத்திற்கு இந்த மாதத்தின் நடுவில் ப்ரீ-புக் ஆரம்பமாகும் என்று கருதப்படுகிறது. வரும்
நவம்பர் மாதத்தில் இந்த 3டி வியூவர் மார்கெட்களில் விற்பனைக்கும் வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் விலை ரூ.96,990 கொண்டதாக இருக்கும்.
கேமாரவிற்கு பெயர் போன சோனி நிறுவனம் புதிய கேமராவினை வழங்காமல் இருக்குமா? நிச்சயம் இந்த தீபாவளிக்கு சோனி நிறுவனம் புதிய கேமராக்களை வழங்கும். அதோடு டிஎஸ்எல்டி ஆல்ஃபா ஏ-99 டிஎஸ்எல்ஆர் மற்றும் டிஎஸ்சி-ஆர்-100 என்று புதிய கேமராக்களை வழங்குகிறது. இது ட்ரேன்ஸுலன்ட் மிரர் டெக்னாலஜியை கொண்டதாக
இருக்கும்.
ஆட்டோ ஃபேக்கஸ் டெக்னாலஜி கொண்ட கேமராவினை பார்த்திருப்போம். இந்த ஆல்ஃபா ஏ-99 கேமரா டியூவல் ஆட்டோ ஃபோக்கஸ் தொழில் நுட்பத்தினை கொடுக்கும். கேமரா 24.4 மெகா பிக்ஸலை இந்த கேமராவில் பெறலாம். டிஎஸ்சி-ஆர்எக்ஸ்-100 கேமராவில் 20.2 மெகா பிக்ஸலை பெறலாம்.
நமது நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை சிறப்பான முறையில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சோனி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் கெனிச்சிரோ ஹிபி தெரிவித்துள்ளார். அப்படி என்றால் சிறப்பு சலுகைகளோ அல்லது புதிய தொழில் நுட்பங்களோ வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.