ஆப்பிள் தனது புதிய ஐபேட் மினி என்று புதிய சாதனத்தை வெகு விரைவில் களமிறக்க தயாராக இருக்கிறது. தற்போதுதான் ஐபோன் 5வை களமிறக்கி இருக்கும் ஆப்பிள் தனது புதிய ஐபேட் மினியை வரும் அக்டோபர் 17ல் அறிமுகம் செய்ய இருப்பதாக ஒருசில வதந்திகள் வந்திருக்கின்றன. மேலும் இந்த ஐபேட் மினிக்கு ஐபேட் ஏர் என்று பெயர் சூட்டப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஐபேட் மினியை அறிமுகம் செய்வதற்கான நிகழ்விற்கான அழைப்பிதழ்கள் அக்டோபர் 10 முதல் அனுப்பப்பட இருப்பதாக தகல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஐபேட் 7.85 இன்ச் அளவில் திரையுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் சந்தையில் இன்னும் ஆப்பிள் முன்னனியில் இருந்தாலும், கூகுளின் நெக்சஸ் 7 டேப்லெட் மற்றும் அமேசானின் கின்டில் பயர் டேப்லெட் போன்றவை ஆப்பிள் சாதனங்களுக்கு கடும் போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அதனால் சிறிய ஐபேடு இந்த போட்டியை சமாளிக்கும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கருத்துரையிடுக