ஒரு காலத்தில் சிறிய ஸ்மார்ட்போன்களை கேலி செய்து வந்த ஆப்பிள், தற்போது தான ஐபேட் மினி என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது.
அதாவது வரும் அக்டோபர் 23 அன்று ஆப்பிள் ஒரு முக்கிய நிகழ்வை அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்வில் இந்த புதிய ஐபேட் மினி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய ஐபேட் மினி 7 முதல் 8 இன்ச் அளவில் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமேசானின் கிண்டில் பயர் எச்டி டேப்லெட் மற்றும் கூகுளின் நெக்சஸ் 7 டேப்லெட் ஆகியவற்றிற்கு இந்த ஐபேட் மினி கடுமையானப் போட்டியைக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்சொன்ன இரண்டு டேப்லெட்டுகளும் 7 இன்ச் அளவில் 199 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகின்றன. கிண்டில் பயர் டேப்லெட் அமெரிக்க டேப்லெட் சந்தையில் ஒரு பெரிய புரட்சியையே ஏற்படுத்தியது.
அக்டோபர் 26ல் மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் 8 இயங்கு தளத்தையும் மற்றும் சர்பேஸ் டேப்லெட்டையும் களமிறக்குகிறது. அதற்கு முன்பாக அதாவது அக்டோபர் 23லேயே தனது ஐபேட் மினியை ஆப்பிள் அறிமுகம் செய்வதால் அதில் ஒரு முக்கிய காரணம் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் ஆப்பிள் ரசிகர்கள் தற்போதே இந்த அக்டோபர் 23 நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதோடு இந்த ஐபேட் மினி ஆப்பிளின் வர்த்தகத்தை உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்பப்படுகிறது.
கருத்துரையிடுக