கூகுள் இந்தியா இந்த 2012க்கான டூடில் 4 என்று கூகுள் போட்டியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவில் இருக்கும் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான டூடில் 4 போட்டியின் மையாக் கருத்தாக வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நடந்த இந்த கூகுள் போட்டியில் ஏறக்குறைய 1 லட்சம் பேர் பங்கு பெற்றதாக கூகுள் தெரிவித்திருக்கிறது. அதனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் உள்ள 40 முக்கிய நகரங்களில் நடைபெற இருக்கிறது.
இந்த கூகுள் போட்டி பள்ளி மாணவர்கள் தங்களது தொழில் நுட்ப திறமைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், தங்களது திறமைகளை வெளிக் கொணர ஒரு சிறந்த மேடையாக இருக்கும் என்று கூகுளின் இந்திய தலைவர் நிகில் ரங்டா கூறியிருக்கிறார்.
மாணவர்கள் தாங்கள் படிக்கும் வகுப்புகளுக்கு ஏற்றவாறு குழக்களாகப் பிரிக்கப்படுவர். அதாவது 1 முதல் 3 வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் குழுவிலும். 4 முதல் 6 வகுப்பு மாணவர்கள் 2 இரண்டாவது குழுவிலும், 7 முதல் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 3 குழுவிலும் இருப்பர்.
மேலும் மாணவர்கள் தாங்கள் இருக்கும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு பிரிக்கப்படுவர். அதாவது கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என்று என்று பிரிக்கப்படுவர். போட்டியின் மூலம் ஒவ்வொரு பகுதியிலுள்ள ஒவ்வொரு குழுவிலிருந்தும் 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அவர்கள் பொதுமக்களின் வாக்கெடுப்புக்கு விடப்படுவர். அதிக ஒவ்வொரு குழுவிலிருந்தும் அதிக எண்ணிக்கை பெறும் ஒருவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வரும் 23க்குள் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கருத்துரையிடுக