A+ A-

ஐபோன் 5க்கு போட்டியாக கேலக்ஸி எஸ் III மினியைக் களமிறக்கும் சாம்சங்


ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் போட்டியை தந்து கொண்டிருக்கும் சாம்சங் தனது வர்த்தகத்தை மேலும் உயர்த்த பல்வேறு புதிய புதிய போன்களைக் களமிறக்கி வருகிறது. சாம்சங்கின் கேலக்ஸி எஸ் III ஸ்மார்ட்போன் சாம்சங்கிற்கு சூப்பரான லாபத்தைத் தந்தது. இன்னும் அந்த போன் அருமையாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கேலக்ஸி எஸ் III மினி என்று புதிய ஸ்மார்ட்போனை சாம்சங் களமிறக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய போனை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது சாம்சங். இந்த அறிவிப்பு விழாவிற்கான அழைப்பிதழ்களை ஜெர்மனி நாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.
ஆப்பிளின் ஐபோன் 5 விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் சாம்சங்கின் கேலக்ஸி எஸ் IIIயும் அதற்கு சரியான போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் 4 இன்ச் அளவில் வரும் புதிய கேலக்ஸி எஸ் III மினி ஐபோன் 5வை வீழ்த்திவிடும் என்று சாம்சங் நம்புகிறது.
சாம்சங்கின் கனவு பலிக்குமா?