கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் தூக்கம் தொலைத்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன், ஒரு வழியாக அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் நமது நாட்டில் எப்போது அறிமுகமாகும் என்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இதற்கு இப்போது தீர்வு காணும் வகையில் ஆப்பிள் நிறுவனம் வருகிற 26ம் தேதி ஐபோன்-5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் மட்டும் புதிதல்ல. இதன் இயங்குதளமும் புதிது தான். இந்த புதிய ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் 200க்கும் மேற்பட்ட புதிய தொழில் நுட்ப வசதிகளை பெறலாம்.
இப்படி பல பிரம்மிக்க வைக்கும் வசதிகளை கொண்ட ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகமான 3 நாட்களிலேயே 50 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி சாதனை படைத்தது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற 26ம் தேதி நமது நாட்டில் அறிமுகமாகும் என்ற செய்தி, வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும் தகவல் தான்.
ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் எந்த மெமரி வெர்ஷன் கொண்ட மாடல்கள் நமது நாட்டில் அறிமுகமாக உள்ளன? என்ன விலை? என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் இன்னும் விடை கிடைக்கவில்லை. இன்னும் சில தினங்களில் இந்த கேள்விகளுக்கு சரியான விடை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
கருத்துரையிடுக