எலக்ட்ரானிக் சாதன உலகில் இதுவரை பல ஸ்மார்ட்போன்களை, க்யூட்டாக அறிமுகம் செய்து வந்த எச்டிசி நிறுவனம் மீண்டும் ஓர் ஸ்மார்ட்போனுடன் களமிறங்கிறது.
ஒன் வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன் எக்ஸ்+ என்று புதிய ஸ்மார்ட்போனில் தொழில் நுட்பத்தில் வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்த வருகிறது எச்டிசி ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டின் லேட்டஸ்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். இதில் 4.7 இஞ்ச் திரை வசதியும் வழங்கப்படுகிறது.
அகன்ற திரை வசதி கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்பதால், பார்ப்பவர்களை பிரம்மாண்டமான தோற்றத்தில் பிரம்மிக்க வைக்கும். இந்த ஒன் எக்ஸ்+ ஸ்மார்ட்போன் எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வசதி கொண்டதாக இருக்கும்.
1.7 ஜிகாஹெர்ட்ஸ் கூவாடு கோர் என்வீடியா டெக்ரா-3 ஏபி-37 என்ற புதிய பிராசஸரும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும். இந்த பிராசஸர் மூலம் இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்கும். இப்போது ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஜெல்லி பீன் இயங்குதளம் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் அந்த அவசியம் இருக்காது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போனில் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் வழங்கப்பட இருக்கிறது.
8 மெகா பிக்ஸல் ரியர் கேமரா மற்றும் 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா ஆகியவற்றை எளிதாக பெற முடியும். இதனால் வீடியோ காலிங் வசதி, புகைப்படங்கள், வீடியோ ரெக்கார்டிங் ஆகிய வசதிகளை எளிதில் பெறலாம்.
பீட்ஸ் ஆடியோ போன்ற நவீன தொழில் நுட்ப வசதிகளையும் இதில் பயன்படுத்த முடியும். 2,100 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் சிறந்த ஆற்றலை எளிதில் பெற முடியும். இதில் இன்டர்னல் மெமரியே 64 ஜிபி வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடப்பட வேண்டிய வசதி. இதன் விலை பற்றிய விவரங்கள் இன்னும் சரிவர அறிமுகம் செய்யப்படவில்லை.
கருத்துரையிடுக