மைக்ரோசாப்ட் தனது புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை உலகம் முழுவதும் களம் இறக்கியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த புதிய இயங்கு தளத்தை இந்தியாவில் வாங்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் இந்தியாவில் இந்த புதிய இயங்கு தளத்தில் வரும் புதிய லேப்டாப்புகள் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் அவற்றின் விலையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எஆர்எம் என்விடியா டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரில் வரும் விவோஆர்டி டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த டேப்லெட் ரூ.54,990க்கு விற்கப்பட இருக்கிறது.
இன்டல் ஐ7 ப்ராசஸர், 8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு போன்ற அம்சங்களுடன் வரும் டெல் நிறுவனத்தில் டெல் எக்ஸ்பிஎஸ் 12 டூவோ லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த லேப்டாப் ரூ.1,04,990க்கு விற்கப்பட இருக்கிறது.
விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் லெனோவா யோகா லேப்டாப் இன்டல் கோர் ஐ5 ப்ராசஸர், 4ஜிபி ரேம், 128ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பு போன்ற வசதிகளுடன் வருகிறது. இந்த லேப்டாப் ரூ.79,990க்கு விற்கப்பட இருக்கிறது.
சாம்சங் சீரிஸ்7 டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த டேப்லெட் ரூ.75,000க்கு விற்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக ஏசரின் அஸ்பயர் எஸ்7 அல்ட்ராபுக் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. 13.3 இன்ச் மல்டி டச் டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த அல்ட்ராபுக் ரூ.92,999க்கு விற்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக அஸ்பயர் எஸ்7-191 லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த லேப்டாப் ரூ.88,499க்கு விற்கப்பட இருக்கிறது.
ஐ5 ப்ராசஸர், 4ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு கொண்ட டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த லேப்டாப் 1,04,990க்கு விற்கப்பட இருக்கிறது. எக்ஸ்பிஎஸ்14 லேப்டாப் ரூ.1,08,490க்கு விற்கப்பட இருக்கிறது.
விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் எச்பி என்வி 14 அல்ட்ராபுக் ரூ.64,990க்கும், யு310 லேப்டாப் ரூ.52,990க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதுபோல் யு510 லேப்டாப் ரூ.64,990க்கு விற்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக சாம்சங் சீரிஸ் 9 அல்ட்ராபுக் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. மேலும் ஐ7 ப்ராசஸர், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி எஸ்எஸ்டி சேமிப்புடன் வரும் இந்த லேப்டாப் ரூ.1,00,000க்கு விற்கப்பட இருக்கிறது. அதுபோல் சாம்சங் சீரிஸ் 5 அல்ட்ராபுக் ரூ.65,000க்கு விற்கப்பட இருக்கிறது.
டெல் நிறுவனத்தின் ஆல் இன் என் டெஸ்க்டாப்பான டெல் இன்பைரன் ஒன் கணினி விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த கணினி ரூ.81,990க்கு விற்கப்பட இருக்கிறது.
அதுபோல் எச்பியின் என்வி டச் ஸ்மார்ட் ஆல் இன் ஒன் கணினி விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த புதிய கணினி ரூ.71,990க்கு விற்கப்பட இருக்கிறது.
லெனோவா நிறுவனத்தின் லெனோவா எ720 ஆல் இன் ஒன் கணினி ரூ.1,13,990க்கு விற்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக சாம்சங் சீரிஸ் 5 ஆல் இன் ஒன் மேசைக் கணினி விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த கணினி ரூ.60,000க்கு விற்கப்பட இருக்கிறது. சாம்சங் சீரிஸ் 7 ஆல் இன் ஒன் கணினி ரூ.74,000க்கு விற்கப்பட இருக்கிறது.
சோனி நிறுவனத்தின் சோனி வயோ டி நோட்புக் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வர இருக்கிறது. இந்த நோட்புக் ரூ.59,990க்கு விற்கப்பட இருக்கிறது.
இவற்றைத் தவிர்த்து மேலும் பல கணினிகள் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வர இருக்கின்றன. அவற்றின் விலை ரூ.24,000லிருந்து தொடங்குகின்றன.
கருத்துரையிடுக