மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கான புதிய எம்எஸ்என்னை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக பல மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.
ஏற்கனவே 50 சதவீத ஸ்டேக்கை தனது எம்எஸ்என்பிசி.காம் என்ற வெப்சைட்டில் தனது கூட்டாளமியான என்பிசி யுனிவர்சலுக்கு கடந்த ஜூலை மாதமே விற்றுவிட்டது.
எம்எஸ்என் மிக முக்கியமாக ரெயூட்டர்சிடமிருந்து ஏராளமான செய்திகளை வாங்கி வெளியிடுகிறது. தானாக வெளியிடுவதில்லை. ஆனால் இனி தானாகவே செய்திகளைத் தானாகவே வெளியிடப் போவதாக தெரிகிறது. ஆனால் அதற்காக எத்தனை செய்தி நிரூபர்களை நியமிக்க இருக்கிறது என்று தெரியவில்லை.
மைக்ரோசாப்டின் வெப்சைட்டான எம்எஸ்என்னிற்கு உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 480 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதாவது அவுட்லுக் மெயில் மற்றும் ஸ்கைப் போன்ற ஆன்லைன் சேவைகளுக்கும் ஏராளமான உறுப்பினர்கள் உள்ளனர்.
இதை மனதில் வைத்து வரும் அக்டோபர் 26ல் விண்டோஸ் 8 சிஸ்டம் மற்றும் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் 10யும் களமிறக்க இருக்கிறது. இதன் மூலம் எம்எஸ்என்னிற்கு மேலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
கருத்துரையிடுக