எச்பி நிறுவனம் எலைட்பேட் 900 என்ற ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்குகிறது. இந்த புதிய டேப்லெட் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.
குறிப்பாக 10.1 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த டேப்லெட் வர்த்தகத்தில் ஈடுபடுவோரைக் குறிவைத்து வருகிறது. இந்த டேப்லெட் 1080பி முகப்பு வீடியோ கேமராவையும், எல்இடி ப்ளாஷ் கொண்ட 8எம்பி பின்பக்க கேமராவையும் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த எச்பி எலைட்பேட் டேப்லெட் சின்சி இயந்திரத்தினால் ஆன அலுமினியம் மற்றும் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 2வையும் பயன்படுத்துகிறது. அதோடு இந்த டேப்லெட் அடுத்த தலைமுறைக்கான இன்டல் மொபைல் ப்ராசஸர்களையும் கொண்டிருக்கிறது.
இந்த டேப்லெட்டில் இன்டக்ரேட்டட் கீபோர்ட், இணைப்பு போர்ட்டுகள், எஸ்டி கார்டு ரீடர், யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்ஐ இணைப்பு போன்ற வசதிகளும் உள்ளன. இந்த புதிய டேப்லெட் வரும் ஜனவரி 2013ல் அமெரிக்காவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை மிக விரைவில் அறிவிக்கப்படும்.
கருத்துரையிடுக