A+ A-

இந்தியாவில் விண்டோஸ் 8 இயங்கு தளம் தயார்



மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்காக தனது விண்டோஸ் 8 இயங்கு தளத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் அக்டோபர் 26 அதாவது இன்று முதல் இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் உயர்தர மொபைல் சாதனங்களில் அப்க்ரேட் செய்ய முடியும்.
Windows 8
அதோடு ஏசர், ஆசஸ், டெல், பிஜிட்சு, எச்சிஎல், எச்பி, லெனோவா, ஆர்பி இன்போ சிஸ்டம், சாம்சங், சோனி, தோஷிபா, விப்ரோ மற்றும் செனித் கம்யூட்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளை இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இந்தியாவில் களமிறக்க காத்துக் கொண்டிருக்கின்றன.
மேலும் விண்டோஸ் 7, எக்ஸ்பி, விஸ்டா போன்ற இயங்கு தளங்களைக் கொண்டிருக்கும் கணினிகளிலும் இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை அப்டேட் செய்யலாம்.
அதோடு கடந்த ஜூன் 2க்கு முன் விண்டோஸ் கணினிகளை வாங்கி இருப்போரும் இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை ரூ.1,999க்கு பதிவிறக்கம் செய்யலாம். அதோடு டிவிடி வாங்குபவர்கள் ரூ.3,499 செலுத்தி இந்த விண்டோஸ் 8 டிவிடியை வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் விண்டோஸ் 8 இயங்கு தளம் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களில் வருகிறது. குறிப்பாக வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு விண்டோஸ் 8 என்டர்பிரைஸ், விண்டோஸ் டு கோ, டைரக்ட் அக்சஸ் மற்றும் ப்ராஞ்ச் கேச் போன்ற வசதிகளை வழங்குகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் எஆர்எம் டேப்லெட்டுகளுக்கான விண்டோஸ் ஆர்டியையும் வழங்கி இருக்கிறது. இந்தியாவில் விண்டோஸ் 8 இயங்கு தளத்தோடு பாரத் மேட்ரிமனி, பிக்பிலிக்ஸ், புக் மை ஷோ, புக் யுவர் டேபுள், பர்ப், டின்கனா, பாஸ்ட்ராக் டீஸ், ப்ளைட் எம்பி3, கானா, கிபிபிபோ, ஐசிஐசிஐ பேங்க் ஐமொபைல், ஐசிஐசிஐ டைரக்ட், ஜஸ்ட் ஈட், மேக் மை டிரிப் எக்ஸ்ப்ளோர், மேப் மை இந்தியா, மை ஏர்டெல், பிவிஆர் சினிமாஸ், டர்லா டலால், யாகூ கிரிக்கெட் மற்றும் சோவி போன்ற அப்ளிகேசன்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.

ஏசர், ஆசஸ், டெல், பிஜிட்சு, எச்சிஎல், எச்பி, லெனோவா, ஆர்பி இன்போ சிஸ்டம், சாம்சங், சோனி, தோஷிபா, விப்ரோ மற்றும் செனித் கம்யூட்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளை இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இந்தியாவில் களமிறக்க காத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் விண்டோஸ் 7, எக்ஸ்பி, விஸ்டா போன்ற இயங்கு தளங்களைக் கொண்டிருக்கும் கணினிகளிலும் இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை அப்டேட் செய்யலாம்.