கணனி உற்பத்தியில் தனக்கென ஒரு முத்திரை பதித்துக் கொண்ட Acer நிறுவனமானது Windows 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய Aspire S7 எனும் Ultrabook Laptopகளை அறிமுகப்படுத்த இருக்கின்றது.
ஒக்டோபர் 26ம் திகதி வெளியிடப்படவிருக்கும் இக்கணனியானது தொடுதிரை வசதியினையும் கொண்டிருப்பதோடு 11.6 அங்குலம் மற்றும் 13.3 அங்குல அளவுகளில் கிடைக்கப்பெறும்.
இவற்றின் Processorஆனது Intel Core i5-3317UB தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக அமைந்துள்ளதோடு 4GB அளவுடையf DDR3 RAM இனையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றில் 11.6 அங்குல அளவு கொண்ட கணனியானது 1,200 அமெரிக்க டொலர்கள் என்றும், 13.3 அங்குல அளவுகொண்ட கணனியானது 1,650 அமெரிக்க டொலர்கள் பெறுமதியானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக