ஆப்பிள் நிறுவனத்தின் காரண கர்த்தாவான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் இறந்து நேற்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் அவர் இந்த உலகிற்கு கொண்டு வந்து அதிசயங்கள் இன்னும் மக்களின் மனங்களில் இன்னும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.
எனவே அவருடைய நினைவாக உக்ரைன் நாட்டில் ஒரு நினைவுச் சின்னம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் ஓடிசா என்ற மாநகரில் இந்த நினைவு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டு இருக்கிறது.
இந்த நினைவுச் சின்னம் 200 கிலோ எடையில் உலோகத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திறந்த உள்ளங்கைக்கு நடுவில் கடிக்கப்பட்ட ஆப்பிள் இருப்பது போல் இந்த நினைவுச் சின்னம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஸ்டீவுக்கு நன்றி என்ற வாசகமும் அந்த நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இரவு நேரங்களில் இந்த நினைவுச் சின்னம் வெள்ளை மற்றும் ஊதா நிறங்களில் உள்ள மின்விளக்குகள் ஒளியில் ஜொலிக்கிறது.
கிரில் மேக்சிமென்கோ என்ற சிற்பி இந்த நினைவுச் சின்னத்தை வடிவமைத்திருக்கிறார். மேலும் இந்த நினைவுச் சின்னம் ஓடிசாவில் உள்ள நோவோசிலஸ்கயா தெருவில் உள்ள கல்லூரிக்கு முன்பாக இந்த நினைவு சின்னம் நேற்று வைக்கப்பட்டது.
ஏற்கனவே புடாபஸ் நகரில் கடந்த டிசம்பரில் ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டது. அதுபோல் ரஷ்யாவும் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வடிக்க திட்டமிட்டிருக்கிறது.
கருத்துரையிடுக