இணையதள சேவையை வழங்கும் நிறுவனங்கள் காஷ்மீர் மாநிலத்தில் யுடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வளைத் தளங்களை தடை செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கன்றன. மேலும் மொபைல்களுக்கான ஜிபிஆர்எஸ் வசதியையும் காஷ்மீரில் தடை செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இஸ்லாமியரின் மத நம்பிக்கைகளுக்கு எதிராக கூறும் காட்சிகளை ஒரு அமெரிக்க திரைப்படம் வெளியிட்டிருக்கிறது. அந்த படத்தில் உள்ள காட்சிகள் யுடியூப்பிலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த காட்சிகளை காஷ்மீரில் உள்ள இஸ்லாமிய மக்கள் பார்க்க நேர்ந்தால் பிரச்சினைகள் எற்பட வாய்ப்பிருக்கிறது என்று கருதிய இந்திய அரசு சில நாள்களுக்கு யுடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களை காஷ்மீரில் தடை செய்யுமாறு உத்தரவிட்டிருப்பதாக ஐபிஎன் தகவல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பொதுமக்களிடத்தில் எந்தவித வெறுப்பும் ஏற்படாமல் மக்கள் பாதுகாப்புடனும், ஒற்றுமையுடனும் வாழ்வதற்கு இத்தகைய காட்சிகள் ஊறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்கா இந்த தடை அமல் படுத்தப்பட்டிருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.
ஆனால் இந்த தடைக்கு பொது மக்களிடம் இருந்து பரவலான எதிர்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால் இந்த தடை மிக விரைவில் தளர்த்தப்படும் என்று நம்பப்படுகிறது.
கருத்துரையிடுக