A+ A-

பார்வையற்றோருக்கான ஒரு புதிய மொபைல்


குவல்காம் மற்றும் ப்ராஜெக்ட் ரே ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய மொபைலைப் பார்வையற்றவர்களுக்காகத் தயாரித்து வருகிறது. இந்த மொபைலைப் பார்க்காமலேயே இயக்க முடியும். இந்த மொபைலுக்கு ரே என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
Ray

ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வரும் இந்த போன் குவல்காம் சினாப்ட்ராகன் சிப்செட்டையும் கொண்டு வருகிறது. குறிப்பாக பார்வையற்றவர்களுக்கான யூசர் இன்டர்பேஸ் இந்த மொபைலில் உள்ளது. எனவே பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் இந்த மொபைலை மிக எளிதாக இயக்க முடியும்.
இந்த மொபைலில் உள்ள எந்த பகுதியைத் தொட்டாலும் இந்த மொபைல் இயங்க ஆரம்பித்துவிடும். பார்வையற்றவர்கள் மிக எளிதாக இந்த மொபைலை இயக்கும் வகையில் இதில் வைப்ரேசன் வசதி, வாய்ஸ் ப்ராம்ப்ட்ஸ் ப்ரொவைட் பீட்பேக் போன்ற வசதிகள் உள்ளன.
இந்த புதிய மொபைல் முதலில் இஸ்ரேல் நாட்டில் சோதனைக்காக களம் இறக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஆடியோ புக்குகளை பதிவிறக்கம் செய்யவும், பார்வையற்றவர்களுக்கான பத்திரிக்கைககளை பதிவிறக்கம் செய்யவும் இந்த மொபைலைப் பலர் பயன்படுத்தி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.