A+ A-

கூகுள் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களைத் தாக்கும் புதிய வைரஸ்


கூகுள் ப்ளேயின் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் ஸ்டோர் மீண்டும் ஒரு முறை ஒரு புதிய வைரஸ் அப்ளிகேசனால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த புதிய வைரஸ் ஆன்ட்ராய்டு சாதனங்களில் உள்ள டேட்டாக்களைத் தாக்கக்கூடும் என்று தெரிகிறது.

இந்த புதிய வைரசுக்கு ட்ரோஜன்!பேக் லுக்கவுட் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய வைரஸ் அப்ளிகசேன் ஆன்ட்ராய்டு சாதனங்களில் உள்ள எஸ்எம்எஸ், எம்எம்எஸ், வீடியோ பைல்கள் மற்றும் எஸ்டி கார்டுகளில் உள்ள பைல்களைத் திருடி ரிமோட் எப்டி செர்வருக்கு அனுப்பிவிடும். மேலும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் உள்ள ரகசிய செய்திகளை மிக எளிதாக வெளி கொணர்ந்துவிடும்.
ட்ரஸ்ட்கோ என்ற சாப்ட்வேருக்கான பாதுகாப்பை வழங்கும் நிறுவனம் இந்த வைரைசை கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் இதுவரை ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களைப் பயன்படுத்தும் எந்த வாடிக்கையாளரும் இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்னும் தகவல் தெரிவிக்கவில்லை.
அவ்வாறு இந்த புதிய வைரஸ் ஆன்ட்ராய்டு சாதனங்களைத் தாக்கினால் அந்த வைரஸை நீக்க ட்ரஸ்ட் கோ வழங்கும் லுக்கவுட் என்ற ஆன்டி வைரஸ் அப்ளிகேசன்களைப் பயன்படுத்தலாம்.