A+ A-

காற்றுவாக்கில் கசிந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனின் விவரங்கள்!


அரிஸ்டோ என்ற புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்கள் காற்றுவாக்கில் பல வலைத்தளங்களில் கசிந்துள்ளது.
பிளாக்பெர்ரி-10 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகமாகும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரிஸ்டோ என்ற பிளாக்பெர்ரியின் தொழில் நுட்பம் பற்றிய விவரங்கள் கசிந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


அரிஸ்டோ ஸ்மார்ட்போன் 4.65 இஞ்ச் ஓலெட் திரை தொழில் நுட்ப வசதியினை கொண்டதாக இருக்கும். இந்த திரை 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும் என்று இதன் தகவல்கள் கூறுகின்றன.
1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஏபிகியூ-8064 க்ரெய்ட் பிராசஸர் வசதியனை கொண்டதாக இருக்கும். 16 ஜிபி இன்டர்னல் வசதியினையும், இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள மைக்ரோஎஸ்டி ஸ்லாட்டின் துணையையும் இந்த அரிஸ்டோ பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் வழங்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமரா, 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பெறலாம்.
2,800 எம்ஏஎச் பேட்டரியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் என்எப்சி தொழில் நுட்பம் மற்றும் வைபை வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் இருக்கும். இது மட்டும் அல்லாமல் லாகுனா என்ற ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்களும் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்த வசதிகளையெல்லாம் கொண்டிருக்கும் என்று வலைத்தளங்களில் கசிந்திருக்கும் தகவல்கள் பட்டியலிட்டு காட்டுகின்றன.
லாகுனா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம்-8960 பிராசஸர் வசதியினை கொடுக்கும். லாகுனா ஸ்மார்ட்போன் 4.2 இஞ்ச் தொடுதிரை வசதியினையும், இந்த திரையின் மூலம் 1280 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போனும் வைபை, ப்ளூடூத், என்எ-ப்சி, ஜிபிஎஸ் ஆகிய வசதிகளை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள உயர்ந்த தொழில் நுட்பங்களகுக்கு இதன் 1,800 எம்ஏஎச் பேட்டரி சிறப்பாக சப்போர்ட் செய்யும். ஆனால் இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் இன்னும் அதிகார பூர்வமாக
அறிவிக்கப்படவில்லை.