A+ A-

எரிபொருளில்லாத விமானம்: நீண்ட நாள் கனவு நெனவானது

சோலார் இம்பல்ஸ் என்ற மிகப்பெரிய சூரிய ஒளியால் பறக்கும் புதிய ரக விமானம் ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவுக்குப் பறந்து சென்றது. ஸ்பெயினின் மேட்ரிட் நகரிலிருந்து புறப்பட்டு 20 மணிநேரம் பறந்து ஆப்பிரிக்காவின் மொராக்கோ நகரை அடைந்தது.

இதன் விமானியான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெட்ராண்டு பிக்கார்டு இந்தப் பயணம் என் நீண்டநாள் கனவு என்று கூறி மகிழ்ந்தார். சிறுவயது முதல் எரிபொருளில்லாத விமானத்தை ஓட்டுவதே அவருடைய கனவாக இருந்தது. இவர் இந்த உலகை ஒருமுறை பலூனில் மிதந்தபடி சுற்றி வந்துள்ளார்.

ஒரே ஒரு இருக்கை மட்டுமே கொண்ட இந்த விமானத்தில் 12,000 சூரிய செல்களைக் கொண்டது. இதன் எடை ஒரு சிறிய காரின் அளவு தான் இருக்கும். இரவிலும் பறக்கும் வகையிலும் சூரிய செல்கள் மின்னூட்டம் பெற்றுள்ளன.

சூரியசக்திப் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டத்தைத் தாம் தொடங்கியதாக பிக்கார்டு தெரிவித்தார். சுவிட்சர்லாந்திலிருந்து பிச்சார்டு இந்த விமானத்தை மேட்ரிட் நகரத்திற்கு மே மாதமே கொண்டு வந்து விட்டார். ஆனால் தட்பவெப்ப நிலை காரணமாக உடனே பறக்க இயலவில்லை.


மேட்ரிடில் இருந்து மொரோக்காவுக்கு 2500 கி.மீ. தூரம் இந்த விமானம் பறந்துள்ளது. 2014ம் ஆண்டில் இந்த விமானம் இன்னும் மேம்படுத்தப்படும். இப்போது பறந்த விமானம் 2003ம் ஆண்டில் ஆரம்பித்தது. இதற்கு நூறு மில்லியன் செலவாயிற்று. 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த விமானம் தயாரித்து முடிக்கப்பட்டது.
எரிபொருளில்லாத விமானம்: நீண்ட நாள் கனவு நெனவானது
எரிபொருளில்லாத விமானம்: நீண்ட நாள் கனவு நெனவானது
எரிபொருளில்லாத விமானம்: நீண்ட நாள் கனவு நெனவானது
எரிபொருளில்லாத விமானம்: நீண்ட நாள் கனவு நெனவானது
எரிபொருளில்லாத விமானம்: நீண்ட நாள் கனவு நெனவானது
எரிபொருளில்லாத விமானம்: நீண்ட நாள் கனவு நெனவானது

சோலார் இம்பல்ஸ் என்ற மிகப்பெரிய சூரிய ஒளியால் பறக்கும் புதிய ரக விமானம் ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவுக்குப் பறந்து சென்றது. ஸ்பெயினின் மேட்ரிட் நகரிலிருந்து புறப்பட்டு 20 மணிநேரம் பறந்து ஆப்பிரிக்காவின் மொராக்கோ நகரை அடைந்தது. இதன் விமானியான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெட்ராண்டு பிக்கார்டு இந்தப் பயணம் என் நீண்டநாள் கனவு என்று கூறி மகிழ்ந்தார். சிறுவயது முதல் எரிபொருளில்லாத விமானத்தை ஓட்டுவதே அவருடைய கனவாக இருந்தது. இவர் இந்த உலகை ஒருமுறை பலூனில் மிதந்தபடி சுற்றி வந்துள்ளார்.