A+ A-

ஆன்லைன் விற்பனையில் கார்பன் ஸ்மார்ட்போன்கள்!


ஸ்மார்ட்போன் விற்பனையில் கிடுகிடுவென்று முன்னேறி வரும் கார்பன் நிறுவனம் தற்பொழுது, புதிய இரண்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கியுள்ளது. கார்பன் ஏ-9+ மற்றும் ஏ-21 என்ற இந்த ஸ்மார்ட்போன்கள், ஆன்லைன் வலைத்தளங்களில் பளிச்சென்று கம்பீரமாக நிற்கிறது.

கார்பன் நிறுவனம் முதலில் அதிகமாக பட்ஜெட் விலை கொண்ட மொபைல்களை வெளியிட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டில் நிறைய உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இதனால் ஏராளமான ஸ்மார்ட்போன் குவியல்களை வழங்கி வருகிறது.
இந்த குவியில் கார்பன் ஏ-9+ மற்றும் ஏ-21 என்ற ஸ்மார்ட்போன்களை பார்க்கலாம். கார்பன் ஏ-9+ ஸ்மார்ட்போன் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும் 4 இஞ்ச் திரையினை கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் டியூவல் வசதியினை வழங்கும்.
ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உருக வைக்கும் இந்த கார்பன் ஏ-9+  ஸ்மார்ட்போன், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸரினையும் கொண்டதாக இருக்கும். 5 மெகா பிக்ஸல் மற்றும் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொடுக்கும். 3ஜி நெட்வொர்க், ப்ளூடூத், வைபை வசதி போன்றவற்றை பயன்படுத்தி பலன் பெறலாம்.
கார்பன் ஏ-21 ஸ்மார்ட்போன், ஏ-9+ ஸ்மார்ட்போனையும் விட சற்று அதிக திரை வசதியினை வழங்கும். இதில் 4.5 இஞ்ச் திரையை பெறலாம். இதில் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். இந்த ஸ்மார்ட்போனும் டியூவல் சிம் வசதி கொண்டதாக இருக்கும்.
ஏ-21 ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்டிவிச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமரா, 1.3 மெகா பிகஸல் கேமரா போன்றவற்றையும் கொடுக்கும். இதில் 3ஜி நெட்வொர்க், வைபை போன்ற தொழில் நுட்ப வசதிகளை எளிதாக பெற முடியும்.
ஃபிலிப்கார்ட் வலைத்தளத்தில் ஏ-9+ ஸ்மார்ட்போன் ரூ. 9,290 விலையில் கிடைக்கும். ஏ-21 ஸ்மார்ட்போனை ரூ. 10,490 விலையில் ஸ்னாப்டீல் வலைத்தில் பெறலாம். ஆனால் இந்த ஸ்மார்ட்போன்களின் வெளியீடு பற்றி அதிகார பூர்வமாக எந்த தகவல்களும் இன்னும் சரிவர வெளியாகவில்லை.