A+ A-

விண்வெளியில் புதிதாக கருந்துளை கண்டுபிடிப்பு


விண்வெளியில் உள்ள வாயு, தூசி, ஒளி போன்றவற்றை தன்வசம் ஈர்க்கும் கருந்துளையை(Black Hole) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த இந்திய விஞ்ஞானி மாண்டா பானர்ஜி தலைமையிலான குழுவினர் ULASJ1234+0907 என்ற சக்தி வாய்ந்த கருந்துளையை கண்டறிந்துள்ளனர்.


இது குறித்து விஞ்ஞானி மாண்டா பானர்ஜி கூறுகையில், விண்ணில் இருக்கும் இந்த கருந்துளைகள் அடர்த்தியான தூசியால் மூடப்பட்டிருந்ததால், இதற்கு முன் இதனை கண்டறிவதில் சிரமம் இருந்தது.


இந்நிலையில் தற்போது அதி நவீன தொலைநோக்கியை பயன்படுத்தி இதனை கண்டுபிடித்துள்ளோம்.


அருகில் காணப்படும் நட்சத்திர கூட்டங்களில் உள்ள பொருட்களை தன்னுள் இழுப்பதினாலேயே இதன் வெப்பம் அதிகரித்து, கதிர்வீச்சை வெளியிடுவதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் புதிதாக கருந்துளை கண்டுபிடிப்பு

விண்வெளியில் உள்ள வாயு, தூசி, ஒளி போன்றவற்றை தன்வசம் ஈர்க்கும் கருந்துளையை(Black Hole) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த இந்திய விஞ்ஞானி மாண்டா பானர்ஜி தலைமையிலான குழுவினர் ULASJ1234+0907 என்ற சக்தி வாய்ந்த கருந்துளையை கண்டறிந்துள்ளனர்.