ஆப்பிள் ஐபேட் மினி டேப்லட்டின் தொழில் நுட்ப சாதனங்கள் பற்றி நிறைய தகவல்கள் வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த தகவலின்படி ஐபேட் மினி டேப்லட்டில் என்னென்ன வசதிகளை பெறலாம் என்பதன் விவரங்களை பற்றி பார்க்கலாம்.
இந்த புதிய டேப்லட் 7.85 இஞ்ச் திரையினை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த டேப்லட் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யாது என்று சொல்லும் தகவல்கள், இதில் வைபை வசதியை மட்டும் பெறலாம் என்றும் கூறுகின்றன. இப்போதெல்லாம் வெளியாகும் டேப்லட்களில் சர்வ சாதாரணமாக 3ஜி, 4ஜி நெட்வொர்க் வசதி வழங்கப்படுகின்றன.
இந்த புதிய ஐபேட் மினி டேப்லட்டில் 3ஜி மற்றும் 4ஜி வசதியை பெற முடியாது என்பது கொஞ்சம் ஏமாற்றமாக இருப்பது போல் தோன்றுகிறது. ஆனாலும் இது அதிகார பூர்வமான அறிவிப்பும் இல்லை. அதனால் இது பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை.
ஆப்பிள் நிறுவனம் 1 கோடிக்கும் அதிகமான டேப்லட்களை உருவாக்குவதாக கூறப்படுகின்றன. இந்த ஐபேட் மினி டேப்லட் ஏ-6 பிராசஸர், நனோ சிம் ட்ரே போன்ற வசதிகளுடன் முகப்பு கேமராவினையும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்டுகிறது.
இதில் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வெர்ஷன்களை பெறலாம். அநேகமாக இந்த டேப்லட் புதிய இயங்குதளமான ஐஓஎஸ்-6 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துரையிடுக