A+ A-

விளம்பரம் பார்த்தால் இலவசமாக கால் செய்யலாம்


கண்ணா லட்டு திங்க ஆசையா? என்று சொல்வது போல நாம் போன் பேச நமக்காக வேறொருவர் பில் கட்டினால் அந்த நேரத்தில் ஏற்படும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது. அப்படிப்பட்ட ஒரு புதிய திட்டத்தைக் களமிறக்க இருக்கிறது எம்டிஎஸ் நிறுவனம். அதாவது நீங்கள் விளம்பரம் பார்த்தால் போதும் நீங்கள் இலவசமாக போன் பேசலாம்.
எம்டிஎஸ் என்ற பெயரில் செயல்படும் சிஸ்டமா ஷியாம் டெலிசர்வீசஸ் லிமிடட் ஒரு புதிய சேவையைத் தொடங்கி இருக்கிறது. இந்த சேவையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் விளம்பரங்களைப் பார்த்தால் அவர்கள் நாள் ஒன்றுக்கு 4 இலவச லோக்கல் கால்களை செய்ய முடியும். ஆனால் ஒவ்வொரு காலையும் 1 நிமிடத்திற்குள் முடித்துவிட வேண்டும்.
எம்டிஎஸ் எம்அட் சர்வீஸ் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தை அக்டிவேட் செய்ய பணம் செலுத்தத் தேவையில்லை. இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த புதிய சேவை எம்டிஎஸ் நெட்வொர்க் உள்ள எல்லா ஆன்ட்ராய்டு சாதனங்களிலும் இயங்கும்.
குறிப்பாக எம்டிஎஸ் எம்டேக் 3.1, எம்டிஎஸ் எம்டேக் 352, எம்டிஎஸ் எம்டேக் 353, எம்டிஎஸ் எம்டேக் 401, எச்டிசி பல்ஸ், கேலக்ஸி ஒய், கேலக்ஸி ஏஸ் டுவோஸ் சிடிஎம்எ போன்ற சாதங்களில் இந்த சேவையை பயன்படுத்த முடியும். அதுபோல் ப்ளாக்பெரி, ப்ரியூ மற்றும் எம்டிஎஸ் மொபைல்களிலும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.
இந்த புதிய சேவையை வழங்க கோகோ கோலா, பெப்சி, மென்டோஸ், சென்டர் ப்ரஸ், பியட், டைட்டன் மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்களோடு கூட்டணி வைத்திருக்கிறது எம்டிஎஸ்.
இந்த எம்டிஎஸ் சேவையைப் பெற எம்டிஎஸ் நெட்வொர் வசதியுள்ள ஆன்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் பிரீ என்று டைப் செய்து 55559 என்ற என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அல்லது எம்டிஎஸ் வாடிக்கையளர் சேவை மையத்திற்கு கால் செய்ய வேண்டும். அதன் பின் இந்த சேவையை பதிவிறக்கம் செய்வதற்கான லிங் அனுப்பப்படும். இந்த எம்அட் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும். இப்போது இந்த சேவையை முழுமையாக அனுபவிக்க முடியும்.