A+ A-

ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை டிஏக்டிவேட் செய்யும் முறை!


வங்கியில் அக்கவுன்ட் அல்லாதவர்களும் உண்டு, ஆனால் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் இல்லாதவர்களை காண்பது அரிது என்று கூறலாம். அந்த வகையில் ஃபேஸ்புக் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்றாக உள்ளது.
How to Deactivate Your Facebook Accountதேவையில்லாத தகவல்கள் உங்கள் ஃபேக்புக் பக்கத்தில் வந்து குவிந்து கொண்டிருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் மாறுபட்ட கருத்துப் பரிமாறல்களை தவிர்க்க விரும்புகிறீர்களா? இதற்கு அக்கவுன்டை டெலீட் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை டீஏக்டிவேட் செய்தால் போதுமானது.
இனி டீஏக்டிவேட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் ஹோம் என்ற பட்டனுக்கும் பக்கத்தில் தலைகீழ் முக்கோண வடிவம் கொடுக்கப்பட்டிருக்கும் இதை க்ளிக் செய்ய வேண்டும்.
இதில் அட்வர்டைஸ், அக்கவுன்ட் செட்டிங்ஸ், ப்ரைவசி செட்டிங்ஸ், லாக் அவுட் போன்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் அக்கவுன்ட் செட்டிங்க்ஸ் வசதியை க்ளிக் செய்ய வேண்டும்.
இதன் பின் இந்த அக்கவுன்ட் செட்டிங்ஸ் விண்டோஸ் திறக்கப்படும். இதில் இடது பக்கம் செக்கியூரிட்டி, நோட்டிஃபிக்கேஷன், சப்ஸ்கிரைப் போன்ற வசதிகள் ஒன்றன் கீழ் ஒன்றாக கொடுக்கப்பட்டிருக்கும். இதில் செக்கியூரிட்டி வசதியினை க்ளிக் செய்ய வேண்டும்.
இதன் பின் செக்கியூரிட்டி என்ற வசதியை க்ளிக் செய்தால், செக்யூரிட்டி செட்டிங்ஸிற்கான பக்கம் திறக்கப்படும். இந்த பக்கத்தை மெதுவாக ஸ்க்ரோல் செய்தால், டீஏக்டிவேட் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். சற்றும் யோசிக்காமல் இதை க்ளிக் செய்யவும்.
இந்த டிஏக்டிவேட் ஆப்ஷனை க்ளிக் செய்தால், அதில் எதற்காக டீஏக்டிவேட் செய்கிறீர்கள் என்ற காரணம் கேட்கப்படும். அதில் சரியான காரணத்தை நிரப்ப வேண்டும். அதன் பிறகு ‘ப்ளீஸ் எக்ஸ்ப்லெயின் ஃப்ர்தர்’ என்ற பெட்டியையும் நிரப்ப வேண்டும்.
How to Deactivate Your Facebook Account
இமெயில் ஆப்ட் அவுட் என்று ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை செலக்ட் செய்யாவிட்டால், ஃபேஸ்புக் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் தகவல்கள், மெயிலில் குவிந்து கொண்டே தான் இருக்கும். இதனால் ‘ஆப்ட் அவுட் ரிசீவிங் ஃபியூச்சர் இமெயில்ஸ் ஃப்ரம் ஃபேஸ்புக்’ என்ற வசதிக்கும் நேராக இருக்கும் பெட்டியில் டிக் செய்து வைத்து கொள்வது நல்லது.
இதன் பிறகு கன்ஃபர்ம் என்ற பட்டனை அழுத்தி அக்கவுன்ட்டை டீஏக்டிவேட் செய்து கொள்ளலாம். இது போன்று செய்வதன் மூலம் உங்கள் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை முழுவதுமாக டெலீட் செய்யாமல், மற்றவர்களின் கண் பார்வையில் இருந்து எளிதாக மறைத்துவிட முடியும்.