ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பாக கால் பதிக்க உதவிய சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை அடுத்து, கேலக்ஸி எஸ்-3 மினி என்ற ஸ்மார்ட்போனை அதிகார பூர்வமாக அறிவித்திருக்கிறது சாம்சங் நிறுவனம்.
இதனால் புதிதாக அறிமுகமான கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போனிற்கும், ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கும் இடையில் ஒரு சிறிய ஒப்பீட்டினை பார்க்கலாம்.
கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் 111.5 கிராம் எடை கொண்டாகவும், ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 112 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் திரையும் ஒற்றுமை கொண்டதாக இருக்கும். கேலக்ஸி எஸ்-3 மினி மற்றும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன்கள் 4 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். இந்த திரையின் மூலம் கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போனில் 800 X 400 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம்.
ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் 4 இஞ்ச் திரையில், 1136 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போனையும் விட, ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அதிக திரை துல்லியத்தினை வழங்கும்.
ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஏ-6 சிப்செட் வசதியினையும், கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் டியூவல் கோர் பிராசஸரினையும் வழங்கும். கேலக்ஸி ஸ்மார்ட்போனின் பிராசஸர் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குவதாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிச்சயம் வேறுபடும். ஏனெனில் ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் தனது சொந்த இயங்குதளத்தில் இயங்குகின்றன. கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்குதளத்திலும், ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஐஓஎஸ்-6 இயங்குதளத்திலும் இயங்கும்.
பிற மொழிகளுக்கு சப்போர்ட் செய்யும் வசதி, வால்பேப்பர் ப்ரிவ்யூ, மேம்படுத்தப்பட்ட ஆன்ட்ராய்டு பீம் போன்ற பல வசதிகளை கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போனில் பெறலாம். புதிய சஃபாரி பிரவுசர், ஐக்ளவுடு ஸ்டோரேஜ், மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் வசதி, புதிய பாஸ்புக் அப்ளிக்கேஷன் வசதி போன்றவற்றை ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம்.
கேமரா என்பது அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் முக்கிய இடம் பெறுவதால், கேமரா பற்றிய தகவல்களையும் பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டதாக இருக்கும்.
ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் ஐசைட் தொழில் நுட்பம் கொண்ட 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் எளிதாக பயன்படுத்தலாம். இதனால் மிக துல்லியமான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போனில் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி என்று 2 விதமான மெமரி வெர்ஷன்களை பெற முடியும். இதன் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும். ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று 3 வெர்ஷனில் மெமரி வசதியினை எளிதாக பெறலாம்.
கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போனில் என்எப்சி தொழில் நுட்ப வசதியினை பயன்படுத்த முடியும். ஆனால் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் என்எப்சி தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்வதில்லை. கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போனில் 1,500 லித்தியம் அயான் எம்ஏஎச் பேட்டரியினையும், ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் இருக்கும் லித்தியம் அயான் பேட்டரியின் மூலம் 225 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 8 மணி நேரம் டாக் டைமினையும் பயன்படுத்தலாம்.
கருத்துரையிடுக