அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மையம் கொண்டிருந்த சான்டி புயல், கடற்கரையோர நகரங்களை நிலைகுலையச் செய்துள்ளது.
13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழையால் நியூயார்க், நியூஜெர்ஸி மாகாணங்கள் வெள்ளக்காடாகியுள்ளன.
மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்றால், மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்துள்ளன.
புயல் காரணமாக நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். 17 மாகாணங்களில் மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடங்கி உள்ளன.
மிக மோசமான காலநிலை நிலவி வருவதுடன், நியூயார்க் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது.
இதனை முழுவதுமாக சரிசெய்ய 20 பில்லியன் பவுண்ட் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா நியூ ஜெர்சி மாகாணத்திற்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
கருத்துரையிடுக