A+ A-

ஆப்பிள் வழங்கும் ஆல் இன் ஒன் டெஸ்க்டாப் கணினிகள்


ஆப்பிள் நிறுவனம் ஐமேக் என்ற ஒரு புதிய ஆன் இன் ஒன் டெஸ்க்டாப் கணினியை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஆல் இன் ஒன் டெஸ்க்டாப் கணினி 21.5 இன்ச் மற்றும் 27 இன்ச் ஆகிய இரண்டு மாடல்களில் வருகிறது. இந்த புதிய கணினி அபாரமான வேகத்தில் இயங்கும் வகையில் இதில் ஏராளமான தொழில் நுட்ப வசதிகள் உள்ளன.
Apple All in one Desktop PC

குறிப்பாக 21.5 இன்ச் மாடலில் வரும் கணினியில் க்வாட் கோர் இன்டல் ஐ5 ப்ராசஸர் மற்றும் 8 ஜிபி ரேம், 1டிபி சேமிப்பு மற்றும் என்விடியாவின் ஜிஇபோர்ஸ் ஜிடி 640எம் ஜிபியு ஆகியவை உள்ளன. இந்த கணினி ரூ.85,900க்கு விற்கப்பட இருக்கிறது.
அதுபோல் 21.5 இன்ச் மாடலில் வரும் உயர்தர கணினி, க்வாட் கோர் இன்டல் ஐ5 ப்ராசஸர், 8ஜிபி ரேம், 1டிபி ஹார்ட் ட்ரைவ் மற்றும் என்விடியாவின் ஜிஇபோர்ஸ் 650எம் ஜிபியு போன்றவை உள்ளன. இந்த கணினி ரூ.99,900க்கு விற்கப்பட இருக்கிறது.
அதே நேரத்தில் 27 இன்ச் மாடலில் வரும் சாதாரண கணினி ரூ.1,22,900க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த கணினி குவாட் கோர் இன்டல் ஐ5 ப்ராசஸர், 2.7 ஜிஹெர்டஸ், 8ஜிபி மெமரி, 1டிபி சேமிப்பு மற்றும் என்விடியா ஜிஇபோர்ஸ் 660எம் ஜிபியு போன்றவை உள்ளன.
மேலும் 27 இன்ச் மாடலில் வரும் உயர்தர கணினி ரூ.1,34,500க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த கணினி குவாட் கோர் இன்டல் ஐ5 சிபியு, 8ஜிபி மெமரி, 1டிபி சேமிப்பு மற்றும் என்விடியா ஜிடிஎக்ஸ் 660எம்எக்ஸ் ஜிபியு போன்றவற்றைக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த கணினிகளில் இன்டல் ஐ7 ப்ராசஸர், 32ஜிபி ரேம் மற்றும் 768 ஜிபி ப்ளாஷ் சேமிப்பு போன்றவற்றை அப்க்ரேட் செய்து கொள்ளலாம். இந்த 21.5 இன்ச் கணினிகள் வரும் நவம்பரிலும், 27 இன்ச் கணினிகள் வரும் டசம்பரிலும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

குறிப்பாக 21.5 இன்ச் மாடலில் வரும் கணினியில் க்வாட் கோர் இன்டல் ஐ5 ப்ராசஸர் மற்றும் 8 ஜிபி ரேம், 1டிபி சேமிப்பு மற்றும் என்விடியாவின் ஜிஇபோர்ஸ் ஜிடி 640எம் ஜிபியு ஆகியவை உள்ளன. இந்த கணினி ரூ.85,900க்கு விற்கப்பட இருக்கிறது. அதுபோல் 21.5 இன்ச் மாடலில் வரும் உயர்தர கணினி, க்வாட் கோர் இன்டல் ஐ5 ப்ராசஸர், 8ஜிபி ரேம், 1டிபி ஹார்ட் ட்ரைவ் மற்றும் என்விடியாவின் ஜிஇபோர்ஸ் 650எம் ஜிபியு போன்றவை உள்ளன. இந்த கணினி ரூ.99,900க்கு விற்கப்பட இருக்கிறது.