A+ A-

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் வால் நட்சத்திரம்

நிலவை விட 15 மடங்கு பிரகாசமான வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வர உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தோன்றும் இந்த வால் நட்சத்திரத்திற்கு இஸ்கான் என்று பெயரிட்டுள்ளனர்.

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் வால் நட்சத்திரம்


இதனை பூமியிலிருந்து வெறும் கண்ணால் பகலில் காண முடியும். இந்த நட்சத்திரம் நிலவை விட 15 மடங்கு பிரகாசமாக இருப்பதால் இதைக் காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வால் நட்சத்திரத்தை ரஷ்யாவை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் அறிவியல் ஆப்டிகல் ஒருங்கிணைப்பு தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
இது இப்போது சூரியனின் வட்டப் பாதையில் 20 லட்சம் மைல் தொலைவில் பர வளையத்தில் சுற்றி வருகிறது. இந்த நட்சத்திரம் சூரியனின் வெளிவட்டப் பாதையில் உள்ள ஊர்ட் பகுதியில் உருவானதாக கருதப்படுகிறது. இங்கு தான் மிக அதிக அளவிலான உறைந்த குப்பை கூளங்கள் உள்ளன.
இந்த வால் நட்சத்திரம் இப்போது வியாழன் கிரகத்தின் உள்வட்டப் பாதையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அது அப்படியே படிப்படியாக பூமியை நோக்கி வரும் என்றும் நம்பப்படுகிறது.
அழுக்குகள் நிரம்பிய ஐஸ்பந்தாக சுற்றிவரும் இஸ்கான் வால் நட்சத்திரம் நிலவை விட அதிக ஒளியை உமிழ்ந்தபடி இருப்பதால் இதை பகல் நேரத்தில் வெறும் கண்ணால் காண முடியும். கடந்த நூறாண்டுகளில் இதுதான் மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரமாக இருக்கும் என வானியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இஸ்கான் எரிநட்சத்திரம் அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மாலை வேளையில் லண்டனில் தெரியும் என பிரபல வானியல் அறிஞர் ராவின் ஸ்கேகெல் தெரிவித்துள்ளார்.

பூமியிலிருந்து வெறும் கண்ணால் பகலில் காண முடியும். இந்த நட்சத்திரம் நிலவை விட 15 மடங்கு பிரகாசமாக இருப்பதால் இதைக் காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வால் நட்சத்திரத்தை ரஷ்யாவை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் அறிவியல் ஆப்டிகல் ஒருங்கிணைப்பு தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.