A+ A-

டிவிக்கு இணைய தளத்தை வழங்கும் புதிய ஸ்மார்ட் பாக்ஸ்


ஜப்பானைச் சேர்ந்த ஆகாய் நிறுவனம் ஸ்மார்ட் பாக்ஸ் என்ற ஒரு புதிய சாதனத்தைக் களமிறக்கியிருக்கிறது. இந்த சாதனத்தின் மூலம் டிவியில் இணைய தளத்தை அக்சஸ் செய்ய முடியும்.  இந்த சாதனம் ரூ.6,590க்கு விற்கப்படுகிறது.
வரும் 3 முதல் 4 மாதங்களுக்கள் ஒரு லட்சம் ஸ்மார்ட் பாக்ஸ் விற்பனையாகிவிடும் என்று ஆகாய் நம்புகிறது. இதன் மூலம் ரூ.250 கோடி வருமானம் வரும் என்று எதிர்பார்க்கிறது.


இந்த ஸ்மார்ட் பாக்ஸ் இந்திய மக்களின் டிவி பார்க்கும் முறையை மாற்றிவிடும் என்று ஆகாய் கருதுகிறது. எல்லா டிவிகளிலும் இந்த ஸ்மார்ட் பாக்ஸை பொருத்திக் கொள்ளலாம். இதன் மூலம் டிவியில் இணைய தளத்தை ஓடவிடலாம்.
ஆன்ட்ராய்டு தளத்தில் வரும் இந்த சாதனம் 1.25 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் ஒரு மவுஸ் கொண்டு வருகிறது. இதில் இருக்கும் 4ஜிபி மெமரியை 32ஜிபி அளவிற்கு எஸ்டி கார்டு மூலம் விரவுபடுத்த முடியும். ஆப்பிள் டிவியைப் போல இந்த ஸ்மார்ட்பாக்சும் ஒரு டிஜிட்டல் மீடியா ஆகும். அதனால் இந்த சாதனத்தின் மூலம் டிவியில் வீடியோ பார்க்க முடியும். வீடியோ கேம்களை விளையாட முடியும். வைபை மூலம் இணைய தளத்தை அனுபவிக்க முடியும்.
இந்த ஸ்மார்ட் பாக்ஸ் 4 யுஎஸ்பி போர்ட்டுகளைக் கொண்டுள்ளது. அதுபோல் இதில் 3ஜி டோங்குளும் உண்டு. லேன், வைபை மற்றும் 3ஜி மூலம் இந்த பாக்ஸில் இணைய தளத்தை இயக்க முடியும். மேலும் இந்த பாக்சை கணினி மற்றும் லேப்டாப்புகளிலும் இணைக்க முடியும்.