நோக்கியா நிறுவனத்தின் புதிய விண்டோஸ் 8 போன்களான லூமியா 820 மற்றும் லூமியா 920 ஆகியவற்றின் முக்கிய சிறப்பு என்னவென்றால் அவை கொண்டிருக்கும் வயர்லஸ் சார்ஜிங் வசதியாகும். இந்த வயர்லஸ் சார்ஜிங் மூலம் போனை மிக விரைவாக சார்ஜ் செய்ய முடியும். அதுபோல் வெளியில் இருக்கும் போதும் வயர்லஸ் மூலம் மொபைலை சார்ஜ் செய்ய முடியும்.
அதோடு நோக்கியா நிறுவனம் தனது லூமியா போன்களுக்கு பலவகையான வயர்லஸ் சார்ஜிங் அக்சஸரிகளை வழங்கி இருக்கிறது. அதோடு இந்த அக்சஸரிகளுக்கான விலையையும் தற்போது வெளியிட்டிருக்கிறது.
அவ்வாறு பார்த்தால் நோக்கியா லூமியா 820 வயர்லஸ் சார்ஜிங் செல் 19.99 இங்கிலாந்து பவுண்டுகளுக்கு அதாவது ரூ.1,693க்கு விற்கப்படும். நோக்கியா லூமியா 820/920 வயர்லஸ் சார்ஜிங் ப்ளேட் 54.99 பவுண்டுகளுக்கு அதாவது ரூ.4,657க்கு விற்கப்படும். நோக்கியா லூமியா 820/920 சார்ஜிங் ஸ்டேன்ட் 69.99 பவுண்டுகளுக்கு அதாவது ரூ.5,928க்கு விற்கப்படும்.
மேலும் நோக்கியா லூமியா 820/920 வயர்லஸ் சார்ஜிங் பில்லோ பை பேட்பாய் 79.99 பவுண்டுகளுக்கு அதாவது ரூ.6,775க்கு விற்கப்படும் இறுதியாக நோக்கியா ஜேபிஎல் ப்ளேஅப் போர்ட்டபுள் வயர்லஸ் ஸ்பீக்கர் 144.99 பவுண்டுகளுக்கு அதாவது ரூ.12,281க்கு விற்கப்படும்.
இந்த நோக்கியா லூமியா 920 ஸ்மார்ட்போன் பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு வருகிறது. குறிப்பாக இதில் பல சூப்பரான அப்ளிகேசன்கள் மற்றும் வீடியோ கேம்கள் உள்ளன. மேலும் இந்த போன் பல வண்ணங்களில் வந்து அசத்த இருக்கிறது. இந்த லூமிய 920 போனின் விலை மற்றும் வெளிவரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கருத்துரையிடுக