இந்தியாவைச் சேர்ந்த மொபைல் நிறுவனமான ஸ்பைஸ் மொபைல் ஹூவேய் நிறுவனத்தோடு புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்திருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் ஹூவேயின் ஒருசில ஆன்ட்ராய்டு போன்களை இனி ஸ்பைஸ் அதிகார்ப்பூர்வமாக விற்பனை செய்யும். மேலும் ஸ்பைஸ்-ஹூவேய் என்ற பெயரில் விற்பனை செய்யும். இதற்கான ஒப்பந்தத்தை இரண்டு நிறுவனங்களும் சமீபத்தில் செய்திருக்கின்றன.
அதே நேரத்தில் ஹூவேய் நிறுவனமும் இந்தியாவில் தனக்கென்று சில்லறை வர்த்தக கடைகளை வைத்திருக்கிறது. அந்த கடைகள் மூலம் மற்ற போன்களை ஹூவேய் விற்பனை செய்யும்.
புதிய ஒப்பந்தத்தின்படி ஸ்பைஸ் 7 முதல் 10 வகையான போன்களை ஸ்பைஸ் – ஹூவேய் பெயரில் களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதோடு தனது சொந்த போனையும் சேர்த்து மொத்தம் 10 மில்லியன் போன்களை விற்பனை செய்ய இலக்கு வைத்திருக்கிறது. மேலும் தென் கிழக்கு ஆசியா பகுதியில் ஸ்பைஸ் நெக்சியன் என்ற பெயரையும் வைத்திருக்கிறது.
ஸ்பைஸ் மற்றும் ஹூவேய் ஆகிய நிறுவனங்களின் கூட்டணி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்புவதாக ஸ்பைஸ் நிறுவனத்தின் தலைவர் பிகே மோடி தெரிவித்திருக்கிறார். மேலும் ஸ்பைஸ் தனது சொந்த 2ஜி மற்றும் வைபை போன்களை தொடர்ந்து விற்பனை செய்யும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் ஆன்ட்ராய்டு போன்கள் மட்டும் ஹூவேய் தயாரித்து வழங்கும். அந்த வகையில் ஸ்பைஸ் மற்றும் ஹூவேய் கூட்டணியில் வரும் முதல் போன் அசென்ட் ஒய்100 ஆகும். 3ஜி வசதி கொண்ட இந்த ஆன்ட்ராய்டு போன் ரூ.6,000க்கு விற்கப்பட இருக்கிறது.
மேலும் இந்த போனில் 2.8 இன்ச் டிஸ்ப்ளே, 3.2எம்பி கேமரா, 512எம்பி ரோம், 256எம்பி ரேம் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. 3ஜி சேவைக்காக டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் ஏர்டெல் நிறுவனத்தோடும், ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களில் ஏர்செல் நிறுவனத்தோடும் மற்றும் ஜெய்ப்பூர் நகரத்தில் டொக்கோமோ நிறுவனத்தோடும் 3 மாதம் ஒப்பந்தம் செய்திருக்கிறது ஸ்பைஸ்.
கருத்துரையிடுக